Just In
- 7 min ago
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- 35 min ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- 56 min ago
ஆரி, பாலா, ரம்யா, ரியோ, சோம்.. செம சூப்பரா இருக்காங்களே.. இறுதிப்போட்டியில் பங்கேற்ற குடும்பங்கள்!
- 1 hr ago
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
Don't Miss!
- News
சென்னை உட்பட 8 நகரங்களில் இருந்து 'படேல் சிலை' கேவாடியாவுக்கு சிறப்பு ரயில்கள்-மோடி தொடங்கி வைத்தார்
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாக்கு தள்ளிடுச்சு.. கடும் போட்டி.. ரியோ, சோமை வீழ்த்தி வின் பண்ண ஆரி.. அடுத்த வார தலைவர் இவர்தான்!
சென்னை: கேப்டன் டாஸ்க்கில் கடும் போட்டிப் போட்டு ரியோவையும் சோமசேகரையும் வீழ்த்தி நடிகர் ஆரி வென்றார்.
கேப்டன் டாஸ்க்கில் ஆரி தான் வெற்றிப் பெற்றார் என பாலா அறிவிக்க, அடுத்த வார கேப்டன் நீங்க தான் ஆரி என பிக் பாஸும் வாழ்த்தினார்.
ஆரி போராடி கேப்டன் பதவியை வெற்றிப் பெற்ற நிலையில், அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அய்யப்பனும் கோஷியும் நடிகர் அனில் நெடுமாங்கட் மரணம்.. ஏரியில் குளித்த போது பரிதாபமாக மூழ்கினார்

அதிக புள்ளிகள்
பால் கேட்ச் டாஸ்க்கில் அதிக புள்ளிகளை அள்ளி ரியோ ராஜ் நேரடியாக தலைவர் போட்டிக்கு தேர்வானார். முதலிடமும் தனக்குத் தான் உரியது என ஆரி மற்றும் ரம்யாவிடம் ரியோ போராடி பெற்றார். ரியோவின் மதிப்பெண்களை ரம்யா கடுப்பில் பூஜ்ஜியம் ஆக்கினாலும், தொடர்ந்து தங்க பந்துகளை திறமையாக பிடித்து கலக்கினார்.

பெஸ்ட் பர்ஃபார்மர்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எல்லாவற்றிலும் சுவாரஸ்யம் ஆனவர்கள் என ஹவுஸ்மேட்கள் ஆரி மற்றும் சோமசேகரை தேர்வு செய்தனர். ஆரி, சோம் மற்றும் ரியோ ஆகிய மூவரும் இன்று நடந்த தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் போட்டியிட்டனர்.

நாக்குத் தள்ளிடுச்சு
வாயில் ஸ்பூனை வைத்துக் கொண்டு, தெர்மாகோல் பந்துகளை நிரப்பி பனி பொம்மையின் தலையை உருவாக்க வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்க ஈஸியாக தெரிந்தாலும், மூவருக்கும் நாக்கு தள்ளிடுச்சு. சோமசேகருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வரை அதன் பாதிப்புகள் இருந்ததை உணர முடிகிறது.

தலைவர் ஆரி
கடும் போட்டியாளர்களான ரியோ மற்றும் சோமசேகருடன் போட்டிப் போட்டு நடிகர் ஆரி வெற்றிப் பெற்றார். பாலா பல முறை ஆரி கோட்டை தாண்டி சென்றார் என்றும், வெற்றி பெற அது தடையாக இருக்கும் என்றும் டீமோட்டிவேட் செய்தார். ஆனால், கடைசியில் ரூல் புக்கில் அதற்கு பெனால்டி இல்லை என்று கூறி ஆரியை தலைவர் ஆக்கினார்.

பாலாவுக்கு பிடிக்கவில்லை
அடுத்த வாரம் ஆரி தலைவர் ஆனது கொஞ்சம் கூட பாலாவுக்கு பிடிக்கவில்லை. அடுத்த வாரமும் ஆரி தப்பி விட்டால், நம்மில் ஒருவர் வெளியேறுவார்கள் என்கிற எண்ணம் பாலாவின் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. அப்பப்போ போட்டியாளர்கள் மத்தியில் தான் நல்லவன் என காட்டிக் கொள்ள நடித்து வருவது தெளிவாக தெரிகிறது.

யார் போவார்?
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை. அனிதா சம்பத் தான் அதிகபட்சமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்கிற கருத்துக்கள் சமூக வலைதளத்தில் எழுந்து வருகின்றன. இந்த வாரமும் ஆஜீத், ஷிவானி, கேபி எல்லாம் காப்பாற்றப்படுவார்களா? என்பது வருத்ததையே தருகிறது. பார்க்கலாம்!