»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரபல தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் தற்கொலைக்கு முயன்றார். நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியே அவரதுஇந்த முயற்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆர்த்தி அகர்வால். "பகல்பன் என்ற இந்திப் படத்தில் தான் இவர் முதன்முதலாகநடித்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான "சங்கராந்தி என்ற தெலுங்குப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது.

தமிழில் பிரசாந்த் நடித்த "வின்னர் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்தப் படத்தில் இவர் கதாநாயகியாகத் தான்ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் இவர் ஏகப்பட்ட கால்ஷீட் குளறுபடி செய்ததால் படத்திலிருந்து இவரை நீக்கிவிட்டனர். ஏற்கனவே இவரை வைத்துஎடுத்திருந்த ஒரு பாடல் காட்சியை மட்டும் வின்னர் படத்தில் சேர்த்து விட்டனர்.

ஆர்த்தி அகர்வாலுக்கும், தெலுங்கு நடிகர் தருணுக்கும் காதல் இருந்து வந்தது. "அஞ்சலிபடத்தில் சிறுவனாக நடித்தவர் தான்இந்த தருண். "புன்னகை தேசம், "எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தருணும், ஆர்த்தி அகர்வாலும் நுகுலேகா நேனு லேனு (நீயின்றி நானில்லை) என்ற தெலுங்குப் படத்தில் முதல் முதலாகஜோடியாக நடித்தனர். இந்தப் படத்திலேயே இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டனர்.

படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இருவரும் ராசியான ஜோடியானார்கள். தெலுங்குப் பட உலகினரும் இருவரையும்பொருத்தமான ஜோடி என அழைத்தனர். இதனால் காதல் வானில் இருவரும் சிறகடித்து பறந்தனர்.

இதையடுத்து சோகோடு என்ற தெலுங்குப் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து 25ம்தேதி ரிலீசாகிறது.

இந்தப் படம் வெளியானதும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தெலுங்குப் பட உலகில் பரபரப்பாகபேசப்பட்டது. ஆனால் இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்த்தி அகர்வாலுடனான காதலை தருண் திடீரென மறுத்தார்.

"நானும், ஆர்த்தி அகர்வாலும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் வெளியான செய்திகளில்எந்த உண்மையும் இல்லை. ஆர்த்தி அகர்வாலுடன் எனக்கு காதல் கிடையாது.

அவரை நான் திருமணம் செய்துகொள்ளப் போவதும் இல்லை. எனக்கு இப்போது 22 வயது தான் ஆகிறது. திருமணம் பற்றி நான்யோசித்ததே கிடையாது. எனது கவனம் முழுவதும் இப்போது நடிப்பின் மீது மட்டுமே உள்ளது என்று பேட்டி தந்தார் தருண்.

தருண் இவ்வாறு கூறியதால் மனமுடைந்த ஆர்த்திக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாககூறப்படுகிறது. ஹைதாராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து ஆர்த்திக்கும் அவரது பெற்றோருக்கும்இடையே தருண் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் நடந்துள்ளது.

இந் நிலையில் அனைவரும் தூங்கச் சென்ற பின் குளியல் அறைக்குச் சென்ற ஆர்த்தி அகர்வால், அங்கு வைக்கப்பட்டிருந்தஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். பிறகு தனது படுக்கை அறையில் மயங்கி விழுந்தார்.

உடனே அவர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸார் ஆர்த்தி அகர்வால் மீது தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருண் கூட முன்னாள் நடிகை ரோஜமணியின் மகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தனது மகன் ஒரு நடிகையைமணப்பதை ரோஜாமணி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil