Aaryan vs Aan Paavam Pollathathu Box Office: ஆரியன் vs ஆண் பாவம் பொல்லாதது.. முதல் நாள் வசூல் எவ்வளவு?
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 8க்கும் மேற்பட்ட புதிய படங்கள் வெளியாகின. அதில், பெரும்பாலும் எல்லாமே சிறு பட்ஜெட் படங்கள் தான். விஷ்ணு விஷாலின் ஆரியன் மற்றும் ரியோ ராஜின் ஆண் பாவம் பொல்லாதது உள்ளிட்ட படங்கள் மட்டுமே ஓரளவுக்கு பாப்புலரான நடிகர்கள் நடித்த படங்களாக வெளியாகின.
விஷ்ணு விஷால் மீண்டும் ஒருமுறை ராட்சசன் போல சீரியல் கில்லர் கதையை தேர்வு செய்து நடித்த படம் அவருக்கு கை கொடுத்ததா? ரியோ ராஜ் கையில் எடுத்த ஆண் பாவம் டைட்டில் அவருக்கு எந்தளவுக்கு ஹிட் கொடுத்தது என்பது தான் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

அக்டோபர் மாத கடைசியில் வெளியான இந்த 2 படங்களின் வசூல் நிலவரம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஆரியன் முதல் நாள் வசூல்: பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான ஆரியன் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. வித்தியாசமான கதை என ஒரு சிலரும் கிளைமேக்ஸ் திருப்திகரமாக இல்லை என்றும் மையக்கருவையே இயக்குநர் ஸ்பாயில் செய்துவிட்டார் என்று ஒரு சிலரும் விமர்சனங்களை முன் வைத்து வந்த நிலையில், விஷ்ணு விஷால் படத்துக்கான ஓபனிங் ரெஸ்பான்ஸ் மக்கள் மத்தியில் எப்படி உள்ளது என்று பார்த்தால், ஆரியன் திரைப்படம் அதிகபட்சமாக முதல் நாளில் 1 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
ஆண் பாவம் பொல்லாதது வசூல்: ஜோ திரைப்படம் ரியோ ராஜுக்கு ஹிட் கொடுத்த நிலையில், மீண்டும் மாளவிகா மனோஜ் உடன் இணைந்து ரியோ ராஜ் நடித்த ஆண் பாவம் பொல்லாதது திரைப்படமும் நேற்று வெளியானது. இந்த படத்துக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்து வரும் நிலையில், முதல் நாளில் இந்த படம் வெறும் 48 லட்சம் மட்டுமே எடுத்துள்ளதாக சாக்னிக் வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது.
சனி, ஞாயிறு மட்டுமே: ஆரியன் மற்றும் ஆண் பாவம் உள்ளிட்ட இந்த வார படங்களுக்கு இன்று மற்றும் நாளை மட்டுமே வசூலை அள்ள வாய்ப்புகள் உள்ள நிலையில், படத்தின் பட்ஜெட் அளவுக்காவது இந்த படங்கள் வசூல் செய்யுமா? என்பது பெரிய கேள்விக்குறி தான் என்கின்றனர். தமிழ் சினிமாவுக்கு அடுத்த பெரிய படம் என்றால் அது டிசம்பர் 18ம் தேதி வெளியாகவுள்ள பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மட்டும் தான் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











