»   »  மீண்டு வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்? விரைவில் விஸ்வரூபம் 2?

மீண்டு வரும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்? விரைவில் விஸ்வரூபம் 2?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன தயாரிப்பாளர்களில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் முக்கியமானவர். தன் படங்களின் ஆடியோ வெளியீட்டுக்கே ஜாக்கி சான், அர்னால்ட் என ஹாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து பரபரப்பாக்கியவர்.

ஆனால் காலம் அவரை கீழே தள்ள, ஃபைனான்ஸ் பிரச்னையில் மாட்டித் தவித்தார்.

Aascar Ravichandiran to start release work of Viswaroopam 2

இந்த பிரச்னைகளின்போது அவரால் வளர்க்கப்பட்டவர்கள் யாருமே அவரை எட்டிக்கூட பார்க்கவில்லையாம். முக்கியமாக அவரால் வளர்ந்த ஹீரோக்களும் இயக்குநர்களும் கூட...

ஆனால் இப்போது எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீண்டுவிட்டாராம் ஆஸ்கர். இதனால் முடங்கிக் கிடக்கும் தன் படங்களை ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முக்கியமாக இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கமலின் விஸ்வரூபம் விரைவில் ரிலீஸ் ஆக வேலைகள் நடக்கின்றன. இதை அறிந்த கமல்ஹாசன், அத்தனை கால் வலியிலும் உற்சாகம் அடைந்திருக்கிறாராம்!

English summary
Sources say that Aascar Ravichandiran is going to start the release work of Kamal Hassan's Viswaroopam 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil