»   »  அண்ணன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் 'யாகாவாராயினும் நாகாக்க'!

அண்ணன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் 'யாகாவாராயினும் நாகாக்க'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவள்ளுவரின் குறளிலிருந்து முதல் அடியை தலைப்பாகக் கொண்டு வருகிறது ஆதி நடித்துள்ள யாகாவராயினும் நாகாக்க.

தன் தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள படம் இது.

ஆறடி மனிதன் ஆனாலும் அவனது மரியாதையும் கௌரவமும் அவன் பேசும் பேச்சில்தான் இருக்கிறது. அவனது மூன்று அங்குல நாக்கில்தான் அவனது கௌரவம் இருக்கிறது என்பார்கள். எதை அடக்கா விட்டாலும் நாவை அடக்க வேண்டும். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்க் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இதான் கதை

இதான் கதை

ஆதி மற்றும் மூன்று நண்பர்களைச் சுற்றியே கதை நிகழ்கிறது. 'நான்கு வாலிபர்கள், ஓர் இரவு, ஒரு வார்த்தை'தான் கதைக்கரு. அப்படி அவர்கள் பேசிய ஒரு வார்த்தை எப்படி அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு திசைமாற்றியது என்பதே கதை.

சத்யபிரபாஸ்

சத்யபிரபாஸ்

படத்தை எழுதி இயக்குபவர் சத்யபிரபாஸ். ஆதியின் அண்ணனான இவர் இந்தியாவில் பிகாம் முடித்துவிட்டு லண்டனில் எம்.பி.ஏ. முடித்தவர். தமிழில் ஜெயம் ராஜா, தெலுங்கில் ஷிவ்குமார் என சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும் சினிமாவைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டுகள் சினிமா படித்தவர். அங்கு சிறந்த 28 மாணவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டு பதக்கமும் பரிசும் பெற்றவர். ஆஸ்கார் விருது விழாவில் மல்ட்டி கல்சரல் மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் சார்பில் கௌரவிக்கப்பட்டவர். முதல் படமாக யாகாவராயினும் நாகாக்க இயக்கியுள்ளார்.

ரவி ராஜா பினிசெட்டி

ரவி ராஜா பினிசெட்டி

ஆதர்ஷ சித்ராலயா சார்பில் ஆதியின் தந்தை ரவி ராஜா பினிசெட்டி தயாரிக்கிறார். இவர் தெலுங்கில் ரஜினி, மோகன் பாபு நடித்த பெத்தராயுடு உள்பட சுமார் 60 படங்கள் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

நடிகர்கள்

இது தம்பிக்காக உருவாக்கப்பட்ட கதையில்லையாம். இந்தக் கதையை தயார் செய்துவிட்டு நடிக்க கதைக்கேற்ற ஒருவர் தேடியபோது அகப்பட்டவர்தான் ஆதி என்கிறார் சத்யபிரபாஸ்.

"இது பாசிடிவ் நெகடிவ் இரண்டும் கலந்த பாத்திரம். பிரபல நாயகர்கள் நடிக்கத் தயங்குவார்கள். தன்னைப் பற்றிய இமேஜ் வட்டம் போடாதவர், தன் மீது எந்த பிம்பமும் விழ விடாதவர் நடிகர்ஆதி. எனவேதான் ஆதியைத் தேர்வு செய்ததாக" கூறுகிறார் இயக்குநர். ஆதியுடன் பயணிக்கும் இந்த 3 இளைஞர்களாக கார்த்திக், ஷ்யாம், சித்தார்த் என மூன்று புது முகங்கள் ஆதியின் மூன்று நண்பர்களாக அழுத்தமாக அறிமுகமாகிறார்கள்.

மீண்டும் ரிச்சா பலோட்

மீண்டும் ரிச்சா பலோட்

நாயகிகளாக நிக்கி கல்ராணி, ரிச்சா பலோட் நடித்துள்ளனர். நிக்கி கல்ராணி நன்றாகத் தமிழ்பேசியதால் தேர்வாகியுள்ளார்.

இவர்கள் தவிர நரேன், பசுபதி, பிரகதி, கிட்டி, மகாதேவன்,பாண்டியநாடு ஹரிஷ் போன்ற அடர்த்தியான திறமை கொண்ட நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள்.

மிதுன் சக்கரவர்த்தி

மிதுன் சக்கரவர்த்தி

எல்லாவற்றுக்கும் மேலாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமாகி நடித்துள்ளார். எவ்வளவோ பேர் அழைத்தும் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்தவரை, இருபது நிமிடத்தில் கதை சொல்லி அசத்தி சம்மதிக்க வைத்துள்ளார் இயக்குநர்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

சென்னை, பாண்டிச்சேரி, கோவா, மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களில் 111 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். பல இடங்களில் பின்புலம் சரியாக அமைய மாதக்கணக்கில் காத்திருந்து எடுத்துள்ளனர். உதாரணமாக சென்னை காசிமேடு கடற்கரையில் 300க்கும் மேல் படகு நிற்பது போல காட்சி வேண்டும். அதற்கு மீன்பிடி தடைகாலம் வரும் வரை காத்திருந்து எடுத்தார்களாம்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்

ஆதி

ஆதி

பட அனுபவம் பற்றி நடிகர் ஆதி பேசும்போது, "இது எனக்கு ஆறாவது படம். நான் படங்களைத் தேர்ந்தேடுத்தே நடிப்பவன். இப்படத்தில் அண்ணனின் இயக்கத்தில் நடித்தது எனக்கு சௌகரியமாக இருந்தது. இது வழக்கமான ஹீரோ ஹீரோயின், வில்லன் பார்முலா கதையல்ல. கண்முன் காண்கிற யதார்த்த மனிதர்களின் கதை. மிகைப்படுத்தலோ போலியான பாசாங்கோ இருக்காது. இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமான படமாக இருக்கும்," என்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது யாகாவராயினும் நாகாக்க.

English summary
Yagavarayinum Naakaakka is Aathi's 6th movie and his brother Sathya Prabhas making his debut as director through this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil