Just In
- 36 min ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
- 3 hrs ago
நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!
- 10 hrs ago
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- 15 hrs ago
யாரு எமனா.. 2 மாசம் கழிச்சு வா.. சில்லுக்கருப்பட்டி இயக்குநரின் அடுத்த படைப்பு.. ஏலே டிரைலர் இதோ!
Don't Miss!
- News
"எய்ட்ஸ் இருக்கு".. காதலன் ஒரு மாதிரின்னா.. காதலி வேற லெவல்.. வெலவெலத்த போலீசார்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான் பார்க்க ஆம்பள மாதிரி இருக்கேனா?: கலாய்த்தவரை விளாசிய ஆத்மிகா
சென்னை:
தன்னை ஆண்களுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்த ஒருவரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார் நடிகை ஆத்மிகா.
நடிகை ஆத்மிகா எப்பொழுது தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டாலும் அவரை ஆண்களுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்கிறார்கள். அவர் பார்க்க ஆண் போன்று இருப்பதாக கலாய்க்கிறார்கள்.
இந்நிலையில் அப்படி கலாய்த்த ஒருவருக்கு ஆத்மிகா தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
இது நியாயமே இல்லை, அது என்ன ரஜினியை இப்படி கலாய்க்கிறது?

மகிழ்ச்சி
நீங்கள் என்னை இந்த லெஜன்டுகளுடன் ஒப்பிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி. இந்த பதில் உங்களுக்கு மட்டும் அல்ல உங்களை போன்ற அனைவருக்கும். இந்த புகைப்படத்தை பார்த்து எனக்கு சிரிப்போ, கவலையோ வரும் என்று நினைக்கிறீர்களா?. அது தான் தவறு. எனக்கு எதுவும் தோன்றவில்லை. உங்களை நினைத்து தான் பரிதாபமாக உள்ளது.

பெண்
ஆண், பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்களின் புரிதலை நினைத்து பாவமாக உள்ளது. பார்க்க எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை. பார்க்க நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. நீங்கள் ரித்திக் ரோஷன் போன்றே இருந்தாலும் உங்களின் இதயம் தூய்மையானதாக இல்லாததால் நீங்கள் அழகில்லை என்றே நினைக்கிறேன்.

குணம்
அடுத்தவர்களை காயப்படுத்தி இன்பம் காண்கிறீர்கள். உங்களின் இந்த குணம் மாற நான் பிரார்த்தனை செய்கிறேன். அழகு உள்ளிருந்து வர வேண்டும். வெற்றி, அழகு, உடை, பார்வை, நடை இப்படி பலவற்றுக்காக கலாய்க்கப்படும் பெண்களின் சார்பாக நான் இதை எழுதுகிறேன். ஒரு பெண்ணாக அதுவும் மகளிர் தினத்தன்று நான் அமைதியாக இருக்க முடியாது. இனி இது போன்று எந்த பெண்களுக்கும் நடக்கவிட மாட்டேன்.

மரியாதை
ஒரு பெண் பார்க்க எப்படி இருக்க வேண்டும் என்று நீங்களோ, வேறு யாரோ விவரிக்கத் தேவையில்லை. பார்க்க எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்து ஆண்களை நாங்கள் மதிப்பிடவில்லை. அவர்கள் எங்களை எப்படி நடத்துகிறார்கள், மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை வைத்தே மதிப்பிடுகிறோம். அவர்களின் தனித்தன்மைக்காக அவர்களை மதிக்கிறோம். கடவுள் எங்களுக்கு கொடுத்துள்ளதை வைத்து நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். உங்கள் தாய், சகோதரிகள் அல்லது எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களை அவர்களாகவே ஏற்று பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

நம்பிக்கை
துணிச்சல், பயமின்மை, நம்பிக்கை தான் என் அழகு. பெண்கள் யாரும் மற்றொரு பெண்ணை இழிவுபடுத்த மாட்டார்கள். அதனால் நீங்கள் ஆணாகத் தான் இருக்க வேண்டும். @mokka_rated_0.00 உங்களை நான் பிரபலமாக்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் ஆத்மிகா. ஆத்மிகாவின் பதிலை அடுத்து அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கிவிட்டார்.