»   »  சீகட்டி ராஜ்ஜியம், ஆவேசம் தெலுங்கில் தள்ளிப் போன காரணம் இதுதான்

சீகட்டி ராஜ்ஜியம், ஆவேசம் தெலுங்கில் தள்ளிப் போன காரணம் இதுதான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலின் சீகட்டி ராஜ்ஜியம் (தூங்காவனம்) மற்றும் அஜீத்தின் ஆவேசம் (வேதாளம்) ஆகிய படங்கள் தெலுங்கில் ஒருவாரம் கழித்தே வெளியாகின்றன.

தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் திடீரென்று இவ்விரு படங்களின் வெளியீடும் தள்ளிப் போயிருக்கின்றன.

படத்தின் டப்பிங் பணிகள் முடிவடையாததால் ஆவேசம் தள்ளிப் போயிருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Aavesham, Cheekati Rajyam Release Postponed

அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதால் தான் சீகட்டி ராஜ்ஜியம் தள்ளிப் போனதாக கமல் தெரிவித்திருந்தார்.

ஆனால் உண்மையான காரணம் வேறு என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள். அதாவது நாகார்ஜுனா - அமலா தம்பதிகளின் இளைய மகன் அகில் நடிப்பில் உருவாகியிருக்கும் அகில் தி பவர் ஆப் ஜா படம் தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

அகிலின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் நாளை தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் வெளியாகிறது. இப்படத்திற்காக தான் ஆவேசம், சீகட்டி ராஜ்ஜியம் படங்கள் தள்ளிப் போனதாக கூறுகின்றனர்.

நாகர்ஜுனா குடும்பத்தினருடன் கமலுக்கு ஒரு நல்ல பந்தம் இருப்பதால் தான் தனது படத்தை தள்ளி வைத்திருக்கிறாராம். இதே போன்று அகிலின் படம் நிறைய திரையரங்குகளில் வெளியாவதால் தான் அஜீத் படமும் தள்ளிப் போயிருக்கிறதாம்.

English summary
Ajith's Aavesham( Vedalam) Kamal Haasan's Cheekati Rajyam(Thoonga Vanam) Release Dates Postponed. Cheekati Rajyam will be Released on November 20th, Avesham Release date Not Confirmed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil