Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 5 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராக்கெட் மாதிரி வால்ல தீயோட இருக்கணும் ... அஜீத் கூறிய தத்துவம்… : இயக்குநர் சரண்
அஜித், ஷாலினி நடித்த 'காதல் மன்னன்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரண். 'அமர்க்களம்', 'பார்த்தேன் ரசித்தேன்', 'ஜெமினி', 'ஜேஜே', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'அட்டகாசம்' என பல வரவேற்பை பெற்ற படங்களை இயக்கினார்.
'அசல்', 'மோதி விளையாடு' என கடைசியாக இவர் இயக்கிய படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. 4 வருடங்கள் கழித்து வினய் நாயகனாகவும் சாமுத்திரிகா, ஸ்வஸ்திகா, கேஷா கம்பட்டி என மூன்று அறிமுக நாயகிகளை வைத்து சரண் இயக்கியுள்ள படம் 'ஆயிரத்தில் இருவர்'.
இப்படத்தின் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது இயக்குநர் சரணிடம், "நீங்கள் பெரிய நடிகர்களிடம் பணியாற்றி இருக்கிறீர்கள். அவர்கள் யாருமே உங்களுக்கு உதவ முன் வரவில்லையா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சரண், எல்லாருமே அவங்களாலான உதவிகளை எனக்கு செஞ்சிருக்காங்க. "பெரிய ஹீரோக்கள் கூட படம் பண்ணிதான் பெரிய டைரக்டர்னு ஒரு அங்கீகாரம் எனக்கு கிடைச்சுது.

நானும் கூட இருந்திருக்கேன்
எல்லாருடைய வளர்ச்சிக் காலத்துலையும் அதிர்ஷ்டவசமா நானும் கூட இருந்திருக்கேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா எனக்கு உதவி பண்ணிருக்காங்க.

சம்மதம் சொன்ன அஜீத்
அஜித் ரெண்டே நிமிஷத்துல ஒரு லைன் மட்டும் கேட்டுட்டு எனக்கு ஒகே சொன்னாரு. நீங்க இயக்குநர் பாலச்சந்தர் கிட்டேர்ந்து வர்றீங்க. உங்களுக்கு இது முதல் படம் வேற. உங்களுக்குள்ள ஒரு வேகம் இருக்கும். கதைய கேட்டு எந்த விதத்துலையும் நான் அதை கெடுக்க விரும்பலை. நீங்க என்ன வேணாலும் பண்ணுங்கனு சொன்னார்.

அஜீத் கொடுத்த ஊக்கம்
அவர் கொடுத்த ஊக்கம்தான் இன்னைக்கு என் நிலைக்கு காரணம். 'அசல்' படத்துக்கு அப்பறம் நானும் அஜித்தும் சேர்ந்து படம் பண்றதுக்கான சூழல் இருந்துது. அதை அஜித் தான் உருவாக்கி கொடுத்தாரு. சில காரணங்கள்னால அது நடக்கல.

வால்ல தீ இருக்கணும்
அஜித் எப்பவுமே "வால்ல தீ இருந்தாதான் ராக்கெட் மேல போகும். அப்படி இருந்தாதான் நம்மளால வேலை செய்ய முடியும்" அப்படின்னு சொல்லுவாரு. அது எப்பவுமே எனக்கு ஒரு இன்ஸிபிரேஷன். எல்லாருமே அவங்களாலான உதவிகளை எனக்கு செஞ்சிருக்காங்க." என்றார்.

மூன்று நாயகிகள் ஒரு நாயகன்
திருநெல்வேலியை கதைக்களமாக கொண்ட இந்தப் படத்தில் வினய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

யாருக்கு நிரந்தர இடம்
முதன் முறையாக மூன்று நாயகிகளை அறிமுகப்படுத்துகிறேன். இவர்களின் யாருக்கு நிரந்தர இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை. யாரையும் திட்டவோ, கோபப்படவோ இல்லை. சிரித்தும் வேலை வாங்கவில்லை என்றார்.

சிரித்த இயக்குநர்
தொடர்ந்து பேசிய நடிகை ஸ்வஸ்திகா, இயக்குநருக்கு கோபப்படவே தெரியவில்லை, சிரித்து சிரித்து வேலை வாங்கினார் என்று கூறினார்.