Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
25வது நாளைத் தாண்டிய ஆயிரத்தில் ஒருவன்!
சென்னை: எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மறுவெளியீட்டில் 25 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துவிட்டது.
ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழா எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
திரையில் எம்.ஜி.ஆரும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் தோன்றும்போது சூடம் காண்பித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்த அனைவருக்கும் ரசிகர்கள் கேசரி வழங்கினார்கள். எம்.ஜி.ஆரின் கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்தனர். கற்பூர ஆரத்தி காட்டினர்.
சென்னை கிண்டி ராஜ்பவன் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.ஈஸ்வரன் வந்திருந்த அனைவருக்கும் லட்டு வழங்கினார். திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், தியேட்டர் மேனேஜர் மாரியப்பன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் மன்றத்தினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுவரை தியேட்டர்கள் மூலம் மட்டும் ஆயிரத்தில் ஒருவன் படம் ரூ.40 லட்சம் வசூல் ஈட்டியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு மேலும் சில அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடப் போகிறாராம் சொக்கலிங்கம். குறிப்பாக சரியாகப் போகாத பகுதியான மதுரையில் அடுத்த மாதம் மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்.