»   »  ஆர்யாவுக்காக காதலரை கழற்றிவிட்ட அபர்னதி: சோக கீதம் பாடும் வாலிபர்

ஆர்யாவுக்காக காதலரை கழற்றிவிட்ட அபர்னதி: சோக கீதம் பாடும் வாலிபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஆர்யா- அபர்னதி அலப்பறை- வீடியோ

சென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்னதி ஆர்யாவுடன் சேர தனது காதலரை கழற்றிவிட்டாராம்.

நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். தினமும் ஒரு போட்டி நடத்துகிறார்கள்.

எலிமினேஷன் ரவுண்டுகள் உண்டு. இந்த நிகழ்ச்சியில் அபர்னதி என்ற போட்டியாளர் ஆர்யாவுடன் ஓவர் நெருக்கம் காட்டுகிறார்.

அபர்னதி

அபர்னதி

பள்ளியில் ஒருவரை காதலித்து அந்த காதல் முறிந்தபோது மிகுந்த வேதனை அடைந்ததாகவும், பின்னர் கல்லூரியில் தன்னை விட சின்ன பையனை காதலித்ததாகவும் அபர்னதி ஆர்யாவிடம் தெரிவித்தார். அந்த பையன் தன் மீது சந்தேகப்பட்டதால் காதல் முறிந்தது என்றார்.

ஆர்யா

ஆர்யா

அபர்னதி மனிஷ் யஷ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆர்யாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரை கழற்றிவிட்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

காதல் தோல்வி

காதல் தோல்வி

அபர்னதியை நினைத்து மனிஷ் யஷ் ஃபேஸ்புக்கில் சோக போஸ்ட்டுகள் போட்டு வந்துள்ளார். அபர்னதி மறுபடியும் தன்னிடம் திரும்பி வருவார் என்று நம்புவதாக மனிஷ் தெரிவித்துள்ளார்.

சோகம்

சோகம்

மனிஷ் பிப்ரவரி மாதம் 12ம் தேதியில் இருந்து காதல் தோல்வி குறித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு வந்துள்ளார். அபர்னதி தன்னிடம் காட்டிய காதலை டிவியில் ஆர்யாவிடம் காட்டுவதை பார்த்து வேதனை அடைந்துள்ளார் மனிஷ்.

காத்திருப்பு

காத்திருப்பு

அபர்னதிக்கு பணம் முக்கியமாக தெரிந்ததால் தன்னை கழற்றிவிட்டுவிட்டு ஆர்யாவை திருமணம் செய்ய சென்றுவிட்டதாக மனிஷ் தனது நண்பர்களிடம் புலம்பியுள்ளார். பின்னர் மனிஷ் தனது காதல் தோல்வி ஃபோஸ்டுகளை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டார்.

Read more about: arya ஆர்யா
English summary
Buzz is that Enga Veetu Mapillai contestant Abarnathi has ditched her boy friend Maniz Yash for actor Arya. Maniz Yash is waiting for her to come back to him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X