»   »  ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் நடிகர் அபி சரவணன்!

ஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் நடிகர் அபி சரவணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வரும் நடிகர் அபி சரவணன், அடுத்து தூத்துகுடியில் நடந்து வரும் ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது குறித்து அபி சரவணன் கூறுகையில், "தூத்துகுடியில் நாற்பத்திஎட்டு நாட்களாக போராடி கொண்டிருக்கும் எமது மக்களை காண #JOINTFORCARE குழு தூத்துகுடி பயணமானோம்... நமது குழுவை சார்ந்த செலவம் ராமசாமி மற்றும் நண்பர்கள் கணேஷ் மலைராசாவுடன் தேவையான உணவுபொருட்களான பிஸ்கட் பிரட் பழங்கள் போன்றவற்றை வாங்கி கொண்டு சென்றோம். பிரிடடிஷ் பேக்கரி உரிமையாளர் ரொட்டிகளுக்கு பணம் வாங்க மறுத்துவிட்டார்.

Abhi Saravanan joins Sterlite protest

செல்லும்வழியில் காரின் கண்ணாடி கதவுகளை இறக்கிவிட்டு சென்றபோது ஸ்டெர்லைட் பணியை நிறுத்தி இரு நாட்களாகியும் காற்றின் நெடி கண்களில் எரிச்சலையும், தொண்டை நமச்சலையும் இரண்டு நிமிடங்களில் பரிசளித்தது எனில் இருபத்திஇரண்டு வருடங்கள் இந்த மக்களின் வாழ்க்கை?

போராட்டக் களத்தை அடைந்தபோது ஒரு வேம்பு மரத்தின் கீழ் மக்கள் அமர்ந்திருந்தனர். ஸ்டெரலைட் எதிரான போராட்டத்தில் அவர்களுடன் நமது #JOINTFORCARE குழுவும இணைந்து கொண்டது..

Abhi Saravanan joins Sterlite protest

நடிகர் அரசியல் கட்சிதலைவர் சரத்குமார் அங்கு சிறிதுநேரத்தில் வந்தார்... நாம் போராட்ட களத்திலிருந்து கிளம்பினோம்..

அரசியல்கட்சிகள் இருக்கும் இடத்த்தில் நமக்கு வேலை இல்லையே ... என அந்த ஊரின் அடிக்குழாயை தேடி சென்றோம்... தண்ணீரை குடித்து பார்த்தோம்.. மக்களின் கொந்தளிப்பிற்கான காரணம் புரிந்தது. மேலும் அங்கு உள்ள நான்கைந்து வீட்டிற்க்குசென்று அந்த மக்களிடம் போராட்டத்திற்கு வராதது குறித்துகேட்டறிந்தோம்.

மீண்டும் கட்சிகரை வேட்டிகள் கிளம்யவுடன் மீண்டும் போரட்டகளத்தை அடைந்தோம் அங்குள்ள சிறுவர் சிறுமிகள் மற்றும் வயதானவர்ளிடயே பாதிப்பு குறித்து கேட்டறிந்தோம்.... மிகவும் மோசமான உடல் பாதிப்புகளை அடைந்துள்ளனர்.

Abhi Saravanan joins Sterlite protest

அன்பான மக்கள் அங்கே சமைத்து அனைவருக்கும் உணவளிக்க தயாரானார்கள்... போராட்டத்திற்கு வந்தாரை உபசரித்து, உணவளித்து பழகிய அவர்களை உட்கார வைத்து உணவுகள் பரிமாரினோம்.. அகமகிழ்ந்த மக்கள் நம்மையும் அமரவைத்து உணவளித்தனர்... அவர்களுடனே போராட்ட களத்தில் இருந்து ஆதரவு தெரிவித்தபோது சென்னையில் ளைஞர்கள் காவிரிக்காக மெரினாவில் கூடுவதாக வந்த தகவலை அடுத்து சென்னை பயணமானோம்....

ஸ்டெர்லைட் ஆலை மூடுவிழாவிற்கு
மீண்டும் வருவோம் என்ற உறுதியோடு விடைபெற்றோம்..," என்றார்.

Read more about: tuticorin
English summary
Young Actor Abhi Saravanan has participated in the protest against Sterlite factory in Tuticorin

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X