»   »  ரம்பா வழியில் அபிநயாஸ்ரீ !

ரம்பா வழியில் அபிநயாஸ்ரீ !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலத்தில் கலைவிழாவுக்கு அழைத்து விட்டு கூறிய பணத்தைத் தராத நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது கவர்ச்சிநடிகை அபிநயாஸ்ரீ, நடிகர்கள் ராம்ஜி, சிட்டிபாபு ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

சமீபத்தில் கோவையில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகை ரம்பா, தன்னை ஆடச் சொல்லிவற்புறுத்தியதாகவும், கூறிய தொகையை கொடுக்க மறுத்ததாகவும் கூறி இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்உள்ளிட்டவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந் நிலையில், ரம்பாவைத் தொடர்ந்து அபிநயாஸ்ரீயும் போலீஸுக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.சேலத்தில் நடந்த கிறிஸ்துமஸ் தின கலை விழாவில் கலந்துகொள்ள அபிநயாஸ்ரீ, நடிகர்கள் ராம்ஜி, சிட்டிபாபு,குமரிமுத்து உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

சேலம் நேரு கலையரங்கில் கலை நிகழ்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியது. அபிநயாஸ்ரீ, ராம்ஜி, சிட்டிபாபுஆகியோரைத் தவிர மற்றவர்கள் மேடைக்கு வந்து ஒவ்வொரு நிகழ்ச்சியாக செய்து கொண்டிருந்தனர். ஆனால்அபிநயாஸ்ரீயைக் காணாததால் அவரைத் தரிசிக்க காத்துக் கொண்டிருந்த கூட்டம் கொந்தளிக்க ஆரம்பித்தது.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் குழம்பிப் போய் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தனர். ஏன் மேடைக்குவரவில்லை என்று கேட்டபோது, பேசியபடி முதலில் பணத்தைக் கொடுங்கள் பிறகு வருகிறோம் என்று மூன்றுபேரும் கூறி விட்டனர்.

முதலில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள், முடிந்தவுடன் பணத்தைத் தருகிறோம் என்று அமைப்பாளர்கள்கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை 3 பேரும் ஒத்துக் கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து 3 பேரும் போலீஸிலும் புகார் செய்தனர். ஒப்புக் கொண்டபடி பணத்தைக் கொடுக்கவில்லைஎன்று அவர்கள் தங்களது புகாரில் கூறியிருந்தனர்.

3 பேரும் ரூ. 1.20 லட்சம் பணம் கேட்டிருந்ததாகவும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதல் கட்டமாக ரூ 35,000கொடுத்திருந்ததாகவும், நிகழ்ச்சி முடிந்தபின் மீதப் பணத்தைக் கொடுப்பதாகவும் கூறியிருந்ததாகத் தெரிகிறது.ஆனால் முதலிலேயே முழுப் பணத்தையும் கொடுத்தால்தான் ஆடுவோம் என்று 3 பேரும் கறாராக கூறி விட்டதால்பிரச்சினை உருவானது.

கிறிஸ்துமஸ் போன்ற நல்ல நாட்களுக்கு, கவர்ச்சி நடிகையைக் கூப்பிட்டுத்தான் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டுமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil