»   »  நிருபர்களைத் தாக்கிய அமிதாப்பச்சன் மகன்

நிருபர்களைத் தாக்கிய அமிதாப்பச்சன் மகன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

புகைப்படக்காரர்களை தாக்கியதற்காக நடிகர் அபிசேக்பச்சனை கைது செய்ய வேண்டும். இல்லையெனில்,கண்டனப் பேரணி நடத்துவோம் என டெல்லி புகைப்படக்காரர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிசேக்பச்சனும் இந்தி நடிகர்தான். இவர் நடித்து வரும்பாஸ் இத்னா சா குவாப் ஹை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்றது.அப்போது நடைபெற்ற சம்பவங்கள் பற்றி டெல்லியைச் சேர்ந்த பத்திரிகை புகைப்படக்காரர் உமேஷ் புரிதெரிவித்ததாவது:

தயாரிப்பாளர்களின் அழைப்பை ஏற்று அபிசேக்பச்சனின் படப்பிடிப்பை புகைப்படம் எடுக்க டெல்லிபுகைப்படக்காரர்கள் சென்றனர். படப்பிடிப்பு நடைபெறும் போது புகைப்படம் எடுக்க அவர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டது.

அப்போது படப்பிடிப்பை காண வந்த மக்களை படத்தின் தயாரிப்பாளரான தான்யா பெல் குச்சியை வைத்துவிரட்டி கொண்டிருந்தார். இதனை படம்பிடிக்க முயன்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை புகைப்படக்காரர்முஸ்தபா குரேஸியை, தான்யா பெல்லும், படப்பிடிப்புக்குழுவை சேர்ந்த மற்றும் சிலரும் தாக்கினர். போலீசார்தலையிட்டு குரேஸியை காப்பாற்றினர்.

படப்பிடிப்பில் மேக்கப்புடன் இருந்த அபிசேக்பச்சனை படம் எடுக்க முயன்றதற்காக இந்து பத்திரிகையின்புகைப்படக்காரர் லட்சுமணன் தாக்கப்பட்டார். அதே போட்டோவை எடுக்க முயன்ற என்னையும்,அபிசேக்பச்சனும் அவருடன் இருந்தவர்களும் தாக்கி காமிராவை என்னிடம் இருந்து பறிக்க முயன்றனர்.

அவர்களிடம் இருந்து ஒருவழியாக தப்பி வந்த என்னிடம் சிலர் வந்து, அபிசேக்பச்சனை தங்கள் விருப்பம் போல்படம் எடுத்துக்கொள்ளலாம், நடந்ததை மறந்துவிடுங்கள் என்றனர். நான் அதற்கு மறுத்துவிட்டேன் என்றார் புரி.

மறுக்கிறார் அபிஷேக்:

ஆனால், தான் யாரையும் தாக்கவில்லை, யாருடைய கேமராவையும் பறிக்கவில்லை என அபிசேக்பச்சன்மறுத்துள்ளார்.

தன்னுடைய படப்பிடிப்பில் இவ்வாறு நடைபெற்றதற்கு காரணம் படப்படிப்பு குழுவினரா அல்லதுபத்திரிகையாளர்களாக என தெரியவில்லை. இருந்த போதும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நான்மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த குழப்பத்திற்கு காரணம் என்ன என்பது தனக்கு புரியவில்லை என்றார்அபிசேக்பச்சன்.

டெல்லி பத்திரிகையாளர்கள் சங்கம், சம்பவம் நடைபெற்று அன்று மாலையே டெல்லி போலீசில் புகார் செய்ததைதொடர்ந்து, தான்யா பெல்லும் அவருடைய படப்பிடிப்புக்குழுவைச் சேர்ந்த பாவேஷ் என்பவரும் திங்கள்கிழமைகைது செய்யப்பட்டனர்.

அபிசேக்பச்சனை கைது செய்யாவிட்டால் கண்டனப்பேரணி நடத்துவோம் என டெல்லி பத்திரிகையாளர் சங்கம்அறிவித்து உள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil