ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி சொன்ன அபிஷேக் பச்சன்.. விட்டா அழுதிடுவாரு போலயே!

மும்பை: ஒரு விருது விழாவில் தனது மனைவி ஐஸ்வர்யாவை நினைத்து நடிகர் அபிஷேக் பச்சன் உணர்ச்சிவசப்பட்டு பேசியது தற்போது பாலிவுட் ஊடகர்களில் பெரிய செய்தியாக உள்ளது. . "உனது தியாகத்தை என்னால் மறக்க முடியாது" என்று அவர் கூறினார். பச்சன் குடும்பத்தினர் தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்திற்காக செய்திகளில் இடம்பிடிப்பது வழக்கம். சில சமயங்களில் அமிதாப் பச்சன் பற்றியும், சில சமயங்களில் அபிஷேக் பச்சன் பற்றியும், அல்லது ஆராத்யா பச்சன் பற்றியும் செய்திகள் வெளியாகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஸ்வேதா பச்சன் மற்றும் நவ்யா நவேலி ஆகியோரும் பங்கேற்றனர். இம்முறை பச்சன் குடும்பத்திற்கு மூன்று ஃபிலிம்பேர் விருதுகள் கிடைத்ததால், இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் மேலும் சிறப்பு சேர்த்தனர்.

அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோருக்கு 'சினி ஐகான் விருது’ வழங்கப்பட்ட நிலையில், அபிஷேக் பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. விருதைப் பெற மேடைக்கு வந்த அபிஷேக், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகள் ஆராத்யாவை நினைத்து உணர்ச்சிவசப்பட்டார்.

Abhishek Bachchan s Emotional Speech At Filmfare Awards 2025

ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி: அவர், "இது உங்கள் இருவருக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்" என்று கூறினார். பின்னர், தொகுப்பாளர் அபிஷேக் பச்சனிடம், "நீங்கள் ஒவ்வொரு முறையும் எப்படி இவ்வளவு சிறப்பாக பேசுகிறீர்கள்? இது மிகவும் கடினமானது" என்று கேட்டார். தனது உரையில் ஐஸ்வர்யாவை குறிப்பிட்டு, "ஐஸ்வர்யா, உனது தியாகத்தினால்தான் நான் இன்று இங்கு நிற்கிறேன்" என்றார். இவர் இவ்வாறு கூறியது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

எமோஷனல்: மேலும், "இந்தத் திரைப்படம் தந்தை மற்றும் மகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால், எனது தந்தை அமிதாப் பச்சன் மற்றும் எனது மகள் ஆராத்யாவுக்கும் இதை அர்ப்பணிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். அபிஷேக் பச்சனின் இந்த பேச்சுக்கு பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். ஒரு இணையவாசி, "தயவுசெய்து யாராவது இதை அவரது தாய்க்கும் சகோதரிக்கும் அனுப்புங்கள்" என்று குறிப்பிட்டார். மற்றொரு இணையவாசி, "ஸ்வேதாவும், நவ்யாவும் விழாவுக்கு வந்திருக்கிறார்கள், ஆனால் ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டார். மற்றொருவர், "இறுதியாக ஐஸ்வர்யாவின் பெயரை உச்சரித்துவிட்டார்" என்று கூறினார். இந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் பல கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X