»   »  அபிஷேக் பச்சனையும் விட்டுவைக்காத 'ஜிமிக்கி கம்மல்'!

அபிஷேக் பச்சனையும் விட்டுவைக்காத 'ஜிமிக்கி கம்மல்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : கடந்த ஓணம் பண்டிகையின் போது மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் கேரளாவின் ஓணம் கொண்டாட்ட பாடலாகவே மாறியது.

குறிப்பாக அந்தப்பாடலுக்கு ஷெரில் என்பவர் தனது நடனக்குழுவினருடன் நடனமாடி பாடல் உலகம் முழுவதும் பயங்கர வைரலானது. அவரைத் தொடர்ந்து பலரும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடி வீடியோக்களை வெளியிட்டனர்.

abhishek bachchan praised jimikki kammal

படத்தின் இடம்பெற்ற ஒரிஜினல் பாடலுக்கே ஷெரில் ஆடிய வெர்ஷன் விளம்பரத்தைத் தேடித் தந்தது. கேரள ரசிகர்கள் பலர் இந்தப் பாடலுக்காகவே படத்தைப் பார்த்ததாகவும் அப்போது கூறியிருந்தனர்.

அதனால் கேரளாவையும் தாண்டி, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களை ஆக்கிரமித்து, பல நாடுகளிலும் அந்தப்பாடல் வைரலாக மாறியது. அந்தப்பாடலுக்கு லேட்டஸ்ட்டாக மயங்கியவர் பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன்.

சமீபத்தில் இந்தப்பாடலைப் பார்த்த அபிஷேக் பச்சன், "ஜிமிக்கி கம்மல் பாடலை திரும்ப திரும்ப பார்ப்பதை நிறுத்த முடியவில்லை... செம" என தனது பாராட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Jimikki Kammal song in Mohanlal's 'Velipadinde pustakam' goes viral in many countries. Abhishek Bachchan who recently listened this song has said on Twitter "Can't stop listening to it... Awesomeness!".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil