Just In
- 16 min ago
யஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்?
- 25 min ago
இப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க!
- 31 min ago
நீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்!
- 38 min ago
பிறந்தநாள் கொண்டாடும் சந்தானம்.. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!
Don't Miss!
- News
நடராஜனை வரவேற்க அமைத்த மேடை, பதாகைகள் திடீர் அகற்றம்.. கடும் கெடுபிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
- Automobiles
ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருகிறது... உறுதி செய்த எஃப்சிஏ தலைவர்...
- Sports
சமாதிக்கு சென்று.. அப்பாவிற்காக கண்ணீர் விட்ட முகமது சிராஜ்.. உணர்ச்சிகரமான போட்டோ.. வைரல்!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Finance
முதல் நாளே அசத்தும் ஜோ பிடன்.. விசா, குடியேற்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ய உத்தரவு..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அபிஷேக் பச்சனின் ப்ரீத் 2 வெப்சீரிஸ்... மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !
மும்பை : ப்ரீத் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வெப்சீரிஸ் அமேசான் பிரைமில் ஜூலை 10ந் தேதி வெளியாக உள்ளது.
ப்ரீத் என்ற சைக்காலஜிக்கல் கிரைம் த்ரில்லர் நிறைந்த வெப் சீரிஸின் முதல் பாகம் வெற்றி பெற்று வந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது.
இந்த இரண்டாம் பாகத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முதன் முதலாக வெப் சீரிஸில் நடிக்கின்றனர்.
நீண்டநாட்களுக்கு பிறகு..புடவையில் பளிச்சென்று மதுபாலா.. அழகி என்று வர்ணித்த குஷ்பு !

முதல்முறையாக
சைக்காலஜிக்கல் கிரைம் த்ரில்லரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ப்ரீத் சீரிஸ் முதல் பாகத்தில் நடிகர் ஆர்.மாதவன் லீட் ரோலில் நடித்திருந்தார். ஒரு சாதாரண மனிதன் அசாதாரண சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே இந்த ப்ரீத் சீரிஸின் மையக்கருவாக உள்ளது. இவ்வாறு இதன் முதல் சீசன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் சீசன் தயாராகி உள்ளது. இதில் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் இரண்டு முன்னணி நட்சத்திரங்கள் முதல்முறையாக வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

அபிஷேக் பச்சன்
இதைக் கேள்விப்பட்ட அவர்களின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ள நிலையில் தற்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இப்போது இணையதளங்களில் தெறிக்க விட்டு கொண்டிருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் இந்தி சினிமா துறையில் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவரான இவர் பல படங்களில் நடித்து பல ஹிட்டுகளை கொடுத்துள்ளார்.

முன்னணி நடிகர்கள்
இப்போதுள்ள சூழ்நிலையில் வெப் சீரிஸ்கள் ட்ரெண்டாகி வரும் நிலையில் பல ஹீரோக்கள் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் பல முன்னணி நடிகர்கள் யாரும் இன்னும் வெப் சீரியல்களில் நடிக்க தொடங்குவதற்கு முன் தற்போது அபிஷேக் பச்சன் தனது முதல் வெப் சீரிஸை நடித்து அதன் ஃபர்ஸ்ட் லுக்கையும் இன்று வெளியிட்டுள்ளார். அபிஷேக் பச்சனை தொடர்ந்து இந்த வெப் சீரிஸில் மற்றுமொரு பிரபலமும் இணைந்துள்ளார்.

முதன்முறையாக வெப் சீரியல்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ரவுண்டு கட்டி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளவர் நடிகை நித்யா மேனன். இந்நிலையில் கடந்த ஆண்டு மங்கள்யான் என்ற படத்தின் மூலம் தனது பாலிவுட் எண்ட்ரியை கொடுத்தார். இவர் நடிக்கும் பெரும்பான்மையான படங்களில் இவருக்கு நிச்சயம் ஒரு விருது கிடைத்துவிடும். நடிப்பில் எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் நடிக்கும் அனைத்து மொழி படங்களிலும் தனது முத்திரையை பதித்து கொண்டு வருபவர் நித்யா. இவர் இதுவரை படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் இப்போது முதன்முறையாக " ப்ரீத் இன் டு தி ஷேடோஸ் " என்ற வெப் சீரிஸில் தோன்றியுள்ளார்.

ஜூலை 10 ஆம் தேதி
அந்த போஸ்டரில் உடைந்த முகங்களின் துண்டுகள் சரிவர பொருத்தப்படாமல் ஒரு முக கவசத்தின் நடுவில் ஒரு பெண் குழந்தை உடலை குறுகிய நிலையில் படுத்திருப்பது போல இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும் பொழுதே நமக்கு இதன் மீதான எதிர்பார்ப்புகள் தொற்றிக்கொள்ளும் நிலையில் இதனை அமேசான் ப்ரைம் வெளியிட உள்ளது. பல திரில்லர் காட்சிகளையும், சஸ்பென்ஸ் காட்சிகளையும் மையமாக கொண்டு வெளிவர இருக்கும் இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியிடபட்டிருக்கும் நிலையில் இந்த வெப்சீரிஸ் வரும் ஜூலை 10 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.