நந்தினியாக ஐஸ்வர்யா ராய் போஸ்டரை பார்த்துட்டு அபிஷேக் என்ன பண்ணிருக்கார் பாருங்க

மும்பை : டைரக்டர் மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.

Recommended Video

Aishwarya Rai Gold & Diamond Wedding saree விலை என்ன தெரியுமா?? |Abhishek Bachchan

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், த்ரிஷா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இருவர், குரு, ராவணன் படங்களைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் நான்காவது படம் இதுவாகும். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் போஸ்டர்

பொன்னியின் செல்வன் போஸ்டர்

பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பல மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது. செப்டம்பர் 30 ல் பெரிய திரைகளில் பொற்காலம் திரும்பி வருகிறது என்ற வாசகத்துடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் ராணி போன்ற உடை, சைடில் கொண்டை அணிந்து காட்சி கொடுத்தார் ஐஸ்வர்யா.

வரிசையாக வரும் போஸ்டர்

வரிசையாக வரும் போஸ்டர்

இந்நிலையில் படத்தின் ப்ரொமோஷனுக்காக படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர்களின் போஸ்டர்கள், அவர்களின் கேரக்டர் பெயருடன் படக்குழு வெளியிட்டு வருகிறது. படத்தின் மோஷன் போஸ்டரை தொடர்ந்து ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் விக்ரம், வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

நந்தினியாக வந்த ஐஸ்வர்யா ராய்

நந்தினியாக வந்த ஐஸ்வர்யா ராய்

இதைத் தொடர்ந்து நேற்று நந்தினி ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அழகி முகத்துடன் பழிவாங்க காத்திருக்கும் இவர் தான் நந்தினி. பழுவுரின் அரசி என்ற கேப்ஷனுடன் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை ஐஸ்வர்யா ராய் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அபிஷேக்கின் ரியாக்ஷன் இதுதான்

அபிஷேக்கின் ரியாக்ஷன் இதுதான்

இதனை பார்த்த ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், ரெட் கலரில் இருக்கும் பெரிய ஹார்ட் எமோஜி ஒன்றை கமெண்ட் பகுதியில் பதிவிட்டுள்ளார். அபிஷேக் செய்த இந்த செயலை சந்தோஷமாக ஐஸ்வர்யா ராயும் பகிர்ந்துள்ளார்.

நந்தினி ரோலுக்கு ஐஸ்வர்யா கரெக்டா

நந்தினி ரோலுக்கு ஐஸ்வர்யா கரெக்டா

ஆனால் பொன்னியின் செல்வனின் நாவல் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில், நந்தினி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராய் செட் ஆவாரா என சந்தேகம் கிளப்பி உள்ளனர். ஏனென்றால் நந்தினி கேரக்டர், வில்லி கேரக்டர். அது இவருக்கு சரி வருமா அல்லது செயற்கை தனமாக இருக்குமா என கேட்டு வருகின்றனர். அதே சமயம், நந்தினி நாட்டிலேயே சிறந்த பேரழகி. அழகான முகத்துடன் வில்லத்தனம் செய்பவர். அதனால் ஐஸ்வர்யா ராய் தான் இந்த ரோலுக்கு சரி என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X