»   »  பிக் பாஸ் வீட்டில் புயலை கிளப்ப வரும் சர்ச்சை நடிகை?

பிக் பாஸ் வீட்டில் புயலை கிளப்ப வரும் சர்ச்சை நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு சர்ச்சை நடிகை ஒருவரை அழைத்துள்ளனர்.

இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசனுக்கு போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள். சல்மான் கான் நடத்தும் இந்த நிகழ்ச்சியின் 11வது சீசனை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் போட்டியாளர் ஒருவர் பற்றிய விபரம் கசிந்துள்ளது.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

மாடலாக இருந்து நடிகையான ஜான்வி கபூர் பாலிவுட் பிரபலங்களான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று பிரச்சனை செய்தவர்.

அபிஷேக்

அபிஷேக்

அபிஷேக் பச்சன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டார் என்றும், தன்னை ஏமாற்றிவிட்டு ஐஸ்வர்யாவை மணப்பதாகவும் தகராறு செய்தவர் ஜான்வி கபூர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஜான்வி கபூர் போன்ற சர்ச்சை பார்ட்டிகளை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்தால் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறும் என்று நினைத்து அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்பும் கூட

முன்பும் கூட

முன்னதாக கடந்த 2008ம் ஆண்டிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜான்வி கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அபிஷேக் பச்சன் திருமணத்தின்போது தனது கை நரம்பை அறுத்துக் கொண்ட ஜான்வி பற்றி தான் அப்போது அனைவரும் பேசினார்கள். அப்படிப்பட்டவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் டிஆர்பியை பற்றி சொல்லவா வேண்டும்.

சர்ச்சை

சர்ச்சை

முடிந்த அளவுக்கு சர்ச்சை பிரபலங்களை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வருவது என்று தீர்மானித்துள்ளார்களாம். சர்ச்சை ஆசாமிகள் ஒரே வீட்டில் இருந்தால் பிக் பாஸ் வீடு களை கட்டும் என்று நம்புகிறார்கள்.

English summary
Abhishek Bachchan's stalker Jhanvi Kapoor has been approached for the Big Boss Hindi show. It has to be recalled that she was approached during Bigg Boss Season 2 (2008) as well.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil