»   »  ஐஸ்வர்யாவின் படம் ரிலீஸாகி ரூ.100 கோடி வசூலிச்சாச்சு: ஆனால் கணவர் இன்னும் பார்க்கலையே

ஐஸ்வர்யாவின் படம் ரிலீஸாகி ரூ.100 கோடி வசூலிச்சாச்சு: ஆனால் கணவர் இன்னும் பார்க்கலையே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது மனைவி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகியுள்ள ஏ தில் ஹை முஷ்கில் படத்தை பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் இன்னும் பார்க்கவில்லையாம்.

கரண் ஜோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மாதம் 28ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் ஏ தில் ஹை முஷ்கில்.

படம் ரிலீஸான நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. இது குறித்து சென்னையின் எப்.சி. கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், ஐஸ்வர்யா ராயின் கணவருமான நடிகர் அபிஷேக் பச்சன் கூறுகையில்,

அபிஷேக்

அபிஷேக்

நான் எனது கால்பந்து அணியுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் ஐஸ்வர்யா நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படத்தை பார்க்கவில்லை. அடுத்த வாரம் பார்ப்பேன்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

படம் தயாரிப்பில் இருந்தபோது சில காட்சிகளை பார்த்தேன். ஐஸ்வர்யா மிகவும் அழகாக இருந்தார். கரண் ஜோஹார் மற்றும் படக்குழுவினரை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளேன். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார் அபிஷேக்.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

ஏ தில் ஹை முஷ்கில் பட ட்ரெயலர் வெளியாகி ஊர், உலகமெல்லாம் பார்த்தபோது அதை மாமனார் அமிதாப் பச்சன் பார்க்கவில்லை. படத்தில் ஐஸ்வர்யா ரன்பிருடன் ஓவர் நெருக்கமாக நடித்துள்ளது பச்சன்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

ஃபேஷ் ஷோ

ஃபேஷ் ஷோ

அபிஷேக் தனது சகோதரி ஸ்வேதா பச்சன் நந்தா கலந்து கொண்ட ஃபேஷன் ஷோவை காண தனது தாய், தந்தையுடன் வந்திருந்தார். ராம்ப் வாக் செய்த ஸ்வேதா தான் டிசைனர் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லாவின் ஷோ ஸ்டாப்பர்.

English summary
Actor Abhishek Bachchan who finds his wife Aishwarya Rai Bachchan "stunning" in her latest Bollywood release 'Ae Dil Hai Mushkil' has not watched the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil