»   »  காதல் ஹாரர் 'வெற்றிமாறன்'... அபிசரவணனை முன்னணி ஹீரோவாக்குமா?

காதல் ஹாரர் 'வெற்றிமாறன்'... அபிசரவணனை முன்னணி ஹீரோவாக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

குட்டிப்புலி படத்திலிருந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் தேடிக் கொண்டிருப்பவர் அபிசரவணன். ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் விவசாயிகளுக்காக போராடுவது என லைம்லைட்டில் இருக்கும் அபி சரவணன் சோலோ ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம் வெற்றி மாறன்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். புதிய இயக்குநர் மனோ இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

Abi Saravanan in a Romantic Horror

தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். குணசேகரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் இசையமைத்துள்ளார்.

"இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது இயல்பு வாழ்க்கைக்கு முரணாக வாழ விரும்புகிறான். அதனால் தான் காதல் என்கிற இயல்பான ஒரு விஷயத்தை அவனால் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அதை தடுக்க பல வழிகளில் முயற்சிக்கிறான்.

Abi Saravanan in a Romantic Horror

இயற்கையின் படைப்பில் காதல் இயல்பான ஒன்று. ஆனால் எப்போதுமே சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. இதனால் பலர் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சிலர் பலியாகவும் செய்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர் தப்பி, தனது நிலைக்கு காரணமானவர்களை பழிவாங்க கிளம்பினால்..? அதுதான் இந்தப்படத்தின் கதை," என்கிறார் இயக்குநர் மனோ.

Abi Saravanan in a Romantic Horror

"இதை கொஞ்சம் ஹாரர் கலந்து வித்தியாசமான முறையில் உருவாக்கியுள்ளார்களாம். "குறிப்பாக பழிவாங்கும் முறையில் நிறைய உத்திகளை கையாண்டுள்ளார். இயக்குநர். அவை படத்தின் ஹைலைட்டான அம்சமாக இருக்கும். அதுமட்டுமல்ல இந்த பழிவாங்கும் விஷயத்தில் தந்தை மகன் பாசப்போராட்டமும் உண்டு. கதையை போனிலேயே கேட்டு ஒப்புக் கொண்டேன்," என்கிறார் ஹீரோ அபி சரவணன்.

படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

English summary
Vetrimaran is an upcoming Romantic Horror movie starring Abi Saravanan in lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil