»   »  மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது! - இளம் நடிகர் வேதனை

மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது! - இளம் நடிகர் வேதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது! - நடிகர் வேதனை- வீடியோ

சென்னை: சென்னையில் உள்ள மால்களில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது என இளம் நடிகர் அபி சரவணன் கூறியுள்ளார்.

குட்டிப்புலி, பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபி சரவணன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று, தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.

Abi Saravanan's comment on security checkup in malls

மால்களில் நடக்கும் பாதுகாப்பு சோதனை குறித்து இவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மால் திரையரங்குகளில் சோதனை என்ற யெரில் செக்யூரிட்டிகள் தடவுவது தர்ம சங்கடமாய், அருவருப்பாய் உள்ளது. அதான் மெட்டல் டிடெக்டர் இருக்கே... அப்புறம் எதுக்கு கைல வேற தடவி பார்குறாங்க?

சரி, பெண்களுக்கு மட்டும்தான் மானம் உண்டா .? ஆண்களுக்கு இல்லையா?

பெண்களுக்கு உள்ளதைப் போல ஆண்டுகளுக்கும் தனி அறை அமைத்து மறைவில் சோதனை செய்யலாமே? அதுவும் கூட மெட்டல் டிடெக்டரில் மட்டுமே செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள ஒற்றை / இரட்டைத் திரையரங்குகள் தவிர, மற்ற மால்கள் அனைத்திலும் இந்த பாதுகாப்புச் சோதனை நடக்கிறது.

English summary
Upcoming actor Abi Saravanan has alleged malls for their irretating security check up

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X