நீங்க சொல்றது தப்பு...அண்ணாச்சியை குறிவைக்கும் அபினய் குரூப்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 போட்டியின் எட்டாம் நாளான இன்று வீட்டின் தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் முதுகில் பெரிய பலூனை கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை மணி ஒலிக்கும் போதும் ஓடிச் சென்று, டேபிளில் இருக்கும் மரக்கோலை எடுத்து மற்றவரின் பலூனை உடைக்க வேண்டும்.

கடைசி வரை தங்களின் பலூனை உடைபடாமல் காப்பாற்றுபவர் வீட்டின் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்படலாம் என டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஆரம்பத்திலேயே பெரும்பாலானவர்களின் பலூன்கள் உடைக்கப்பட்டன. நிரூப், தாமரை, சின்ன பொண்ணு, மதுமிதா, பிரியங்கா ஆகியோர் அதிக நேரம் தங்களின் பலூனை காப்பாற்றி வைத்தனர்.

 Abinai group targets imman annachi

யாருடைய பலூன் உடைகிறதோ அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறுவார்கள் என பிக்பாஸ் கூறி இருந்தார். ஆனால் அபினய், வருண், சிபி உள்ளிட்டோரின் பலூன்கள் உடைந்த பிறகும் அவர்கள் மற்றவர்களின் பலூனை உடைக்க முயற்சித்தனர். இது தவறு என இமான் அண்ணாச்சி எடுத்துக் கூற முயன்றார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.

ஒருவர் தலைவர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என்றால் நான் அவரின் பலூனை உடைப்பதில் என்ன தவறு என அபினய் மற்றும் வருண் மிக கோபமாக அண்ணாச்சியிடம் வாக்குவாதம் செய்தனர். அண்ணாச்சியை அவர்கள் பேச விடாமல், நீங்க சொல்றது தப்பு என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

அப்போது ஓடிச் சென்று பிளாஸ்மா டிவி முன்பு இருந்த போட்டி விதிகளை படித்த ஐக்கி, பலூன் உடைபட்டவர் போட்டியில் இருந்து வெளியேறுவார் என படித்தார். அதற்கு பிறகு அண்ணாச்சியும், இந்த வார்த்தை நினைவில் இருந்ததால் தான் நான் கூறினேன் என்றார். அதுவரை கோபமாக வாக்குவாதம் செய்த வருண் போன்றவர்கள், இல்லை நான் கூலாக தான் பேசுகிறேன் என்றனர்.

அபினய், வருண், சிபி ஆகியோர் தங்களுக்குள் ஒரு குரூப் உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்த குரூப், அண்ணாச்சியை குறிவைத்து தாக்குவதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X