வாசல் கதவு வரை வந்துட்டு போறவர் அபிநய்.. இந்த வாரமும் அவர் வெளியேறவில்லை என்பதை சூசகமாக சொன்ன கமல்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் ஒவ்வொரு வாரமும் எந்தவொரு சலுகையும் இன்றி போட்டியாளர்களை இம்முறை கமல் வெளியேற்றி வருகிறார்.
இந்த வாரம் மதுமிதா தான் வெளியேறி விட்டார் என்கிற தகவல் தெரிந்த பிறகு மூன்றாவது புரமோவில் கமல் கொடுக்கும் பில்டப் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பேற்றத்தான் செய்கிறது.

சனிக்கிழமையே லீக்
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்பதை அறிந்து கொள்ள ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சி வரும் வரை காத்திருக்க தேவையில்லை. சனிக்கிழமை ஷூட்டிங் முடிந்ததும் எவிக்ட் செய்யப்பட்ட போட்டியாளர் யார் என்பது கசிந்து விடுகிறது.

மதுமிதா வெளியேற்றம்
அப்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா தான் வெளியேறி உள்ளார் என்கிற தகவலும் நேற்றே கசிந்து வைரலாகி விட்டது. இருந்தாலும், பிக் பாஸ் குழு அவங்க வேலையை விடாமல் செய்து வருவது போல இன்றைய புரமோக்களை வெளியிட்டு வருகின்றனர். கசிந்த தகவலின் படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேறுகிறார்.

அபிநய்க்கு பில்டப்
ஆனால், என்னமோ இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஜெமினி கணேசன் பேரன் அபிநய் தான் வெளியேறப் போகிறார் என கமல் மூன்றாவது புரமோவில் கொடுக்கும் பில்டப்புகளை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகி உள்ளனர்.

வாசல் கதவு வரை
ஒவ்வொரு வாரமும் அபிநய்க்கு குறைவான ஓட்டுக்களே கிடைத்து வருவதை அவரும் உணர்ந்தது போல தெரியவில்லை. கமல் உணர்த்தியும் புரிந்து கொள்ளாமல் இந்த வாரம் அபிநய் பேசியது எல்லாத்துக்கும் பஞ்ச் கொடுப்பது போலவே ஒவ்வொரு வாரமும் அபிநய் விளிம்பு நிலையில் உள்ளார். வாசல் கதவு வரை வந்து போகிறார் எனக் கூறி எவிக்ஷன் யார் என்பதை சொல்ல முனையும் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

கமல் சூசகம்
ஒவ்வொரு முறையும் வாசல் கதவு வரை வந்து 'போகிறவர்' அதாவது எவிக்ட் ஆகாமல் மீண்டும் வீட்டுக்குள் போகும் அபிநய் இந்த வாரமும் காப்பாற்றப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் போகிறார் என்பதை சூசகமாக சொல்லி புரியவைத்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அடுத்த வாரமாவது
மதுமிதாவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியவர் தான். ஆனால், அதற்காக அபிநயை இன்னும் பல வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க வைக்க வேண்டாம் என்றும் அடுத்த வாரமாவது அவரை வீட்டுக்கு அனுப்பி விடுங்க கமல் சார் என ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர். ஆனால், அபிநய்க்கு இந்த சீசனில் எத்தனை வாரங்கள் இருக்க போகிறார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











