உங்க அட்வைஸ் கேட்கமாட்டேன்.. பஞ்சாயத்து பண்ண வந்த அண்ணாச்சியை பஞ்சராக்கிய அபிநய்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியே போவார், அடுத்த வாரம் வெளியே போவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்த அபிநய் இனிமே கடைசி வரைக்கும் இந்த வீட்டில் இருக்கப் போகிறேன் என்பது போல இறங்கி ஆடி வருகிறார்.

பிக் பாஸ் ஹோஸ்ட் கமல் கொடுத்த அட்வைஸை புரிந்து கொண்டு வருண் மற்றும் அபிநய் விளையாட ஆரம்பித்துள்ளனர்.

நிரூப் தான் டாப் பிளேயர் என்பதால் அவருடனே சண்டை போட்டு நாம் இந்த வீட்டில் சர்வைவ் பண்ணலாம் என்கிற முடிவை அபிநய் எடுத்துள்ளார்.

அமைதி அபிநய்

அமைதி அபிநய்

காதல் மன்னன் ஜெமினி கணேசன் பேரனான அபிநய் பிக் பாஸ் வீட்டில் வந்ததில் இருந்தே அமைதியாக இருந்து விட்டு ஓரிரு வாரத்திற்குள் அவங்களே அனுப்பி விடுவார்கள் அப்படியே சைலன்ட்டாக கிளம்பிவிடுவோம் என்கிற பிளானோடவே உள்ளே வந்தது போல இருந்தார்.

உத்வேகப்படுத்திய கமல்

உத்வேகப்படுத்திய கமல்

களமிறங்கி விளையாடியவர்களை அர்வக் கோளாறுகளாக மாற்றி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிய நிலையில், அமைதியாக இருப்பவர்களை உசுப்பேற்றி அவர்களுக்குள் இருக்கும் உண்மையான மிருகத்தை தட்டி எழுப்பும் வேலை இந்த சீசனில் நடந்து வருகிறது. கமல் உத்வேகப்படுத்த அபிநய் மற்றும் வருண் தங்களுக்கான ஆட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆட ஆரம்பித்துள்ளனர்.

இந்த வாரமும் நாமினேஷனில்

இந்த வாரமும் நாமினேஷனில்

நாமினேஷனில் தனது பெயர் இடம்பெறவில்லை என்றால் தான் ஆச்சர்யம் எனும் அளவுக்கு அபிநய்க்கு பிக்பாஸ் நாமினேஷன் பழகிப் போச்சு. இந்த வாரமும் கடைசி நபராக அபிநய் பெயரை பிக் பாஸ் அறிவித்தபோது பல போட்டியாளர்கள் சிரித்தனர். கடந்த வாரமே அண்ணாச்சியை விட அதிக வாக்குகளை பெற்று சேவ் ஆன நிலையில், இந்த வாரம் தனக்கு மேலும், அதிக வாக்குகள் வர என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து செய்து வருகிறார்.

நிரூப்புடன் சண்டை

நிரூப்புடன் சண்டை

டம்மி பீஸ்களுடன் மோதல் வைத்துக் கொண்டாலும் நல்லா பேசி பழகினாலும் பிக் பாஸ் எடிட்டர் கட் செய்து விடுவார். மாமிச மலை நிரூப் உடன் மோதல் வைத்துக் கொண்டால் எல்லா புரமோவிலும் நம்மள தான் காட்டுவாங்க என்கிற கேம் பிளானை புரிந்து கொண்டு நிரூப்புடன் சண்டை போட்டு வருகிறார் அபிநய்.

ஆஜரான அண்ணாச்சி

ஆஜரான அண்ணாச்சி

ராஜுவுக்கும் இமான் அண்ணாச்சிக்கும் எப்படி ஒரு நல்ல நட்பு இருக்கிறதோ அதே அளவுக்கு நிரூப்புக்கும் அண்ணாச்சிக்கும் ஒரு நட்பு நிலவி வருகிறது. இந்நிலையில், நிரூப்புடன் அபிநய் சண்டை போட்ட நிலையில், உங்களுக்குள் என்ன பிரச்சனை எனக் கேட்டு இந்த சண்டையை பஞ்சாயத்து பண்ணி பைசல் பண்ணி வைக்கலாம் என ஆஜரான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவில் இடம்பெற்றுள்ளன.

உங்க அட்வைஸ் கேட்கமாட்டேன்

உங்க அட்வைஸ் கேட்கமாட்டேன்

ஒரு பக்கம் இமான் அண்ணாச்சியின் கண்ணாடியாக இசைவாணி இமிடேட் செய்து கடுப்பேற்றிக் கொண்டிருக்க மறுபக்கம் உங்க அட்வைஸ் கேட்கமாட்டேன் என அபிநய் முகத்தில் அறைந்தது போல சொல்லும் புரமோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X