அபினய் – பாவ்னி காதல் உண்மையா ?...முதல் முறையாக வாய்திறந்த அபினய்யின் மனைவி

சென்னை : 100 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விட்டது. இதை தொகுத்து வழங்கி வந்த கமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் கமலுக்கு பதிலாக தற்காலிகமாக ரம்யா கிருஷ்ணன், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரம்யா கிருஷ்ணன், ஒரே நாளிலேயே கடும் விமர்சனங்களையும், எதிர்ப்புக்களையும் ரசிகர்களிடையே சந்தித்துள்ளார்.

ஹாட் டாப்பிக்கான காதல்

ஹாட் டாப்பிக்கான காதல்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அபினய் - பாவ்னி இடையேயான காதல் விவகாரம் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது. வீட்டிற்குள் மற்ற போட்டியாளர்கள் மட்டுமல்ல வெளியில் ரசிகர்களும் இதை கேட்க துவங்கி விட்டனர். இது பரபரப்பையும் கிளப்பி உள்ளது.

பாவ்னியை லவ் பண்றியா

பாவ்னியை லவ் பண்றியா

இந்த வாரம் கொடுக்கப்பட்ட Truth or Dare டாஸ்கில் அபினயிடம், நீ பாவ்னியை லவ் பண்ணுறியா என அனைவரின் முன்னிலையிலும் ஓப்பனாக கேட்டார் ராஜு. எதிர்பாராத இந்த கேள்வியால் அபினய், பாவ்னி மட்டுமல்ல அனைவரும் ஷாக் ஆகினர். இந்த கேள்வியை கேட்டதற்காக பிரியங்கா கூட ராஜுவை திட்டினார்.

ராஜு சொன்ன விளக்கம்

ராஜு சொன்ன விளக்கம்

அபினய் திருமணமானவர். அவருக்கு குடும்பம், மனைவி, குழந்தை இருப்பது தெரிந்தும் நீ எப்படி இந்த கேள்வியை கேட்கலாம். நீ கேட்டது ரொம்ப தப்பு என்கிறார் பிரியங்கா. ஆனால் நிரூப்பிடம் பேசும் ராஜு, நான் வேண்டுமென்று கேட்கவில்லை. அப்போதைக்கு அது தான் மனதில் தோன்றியது. அதனால் எதார்த்தமாக தான் அப்படி கேட்டேன். ஆனால் அதற்கு பிறகு தான் யோசித்தேன். அப்படி கேட்டிருக்க கூடாது என்கிறார் ராஜு.

அன்சீனில் பேசிய ஹவுஸ்மேட்கள்

அன்சீனில் பேசிய ஹவுஸ்மேட்கள்

ஆனால் நமக்குள் காதல் இருந்தால் என்ன, இல்லையென்றால் என்ன. அதை எதற்காக இவர் கேட்கிறார் என அபினய் மற்றும் பாவ்னி பேசிக் கொள்கிறார்கள். இது நட்பு தான். வெளியில் போனாலும் இந்த நட்பை தொடருவேன் என அபினய்யிடம் சொல்கிறார் பாவ்னி. ஆனால் அன்சீன் காட்சிகளில் பிரியங்கா, அபிஷேக் உள்ளிட்டோரும் பல இடங்களில் பாவ்னி மற்றும் அபினய் பழகுவது பற்றி பேசி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஜு கேட்டது உண்மையா

ராஜு கேட்டது உண்மையா

பல இடங்களில் அபினய் - பாவ்னி உடையேயான பேச்சு, அவர்கள் நடந்து கொண்ட விதம், இருவருக்கு இடையேயான காதல் உண்மை தானோ என அனைவரையும் நினைக்க வைத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் அமீருடன் பாவ்னி சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அபினய் கடுப்பாகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், அப்படியானால் ராஜு கேட்டது உண்மை தானா என கேட்டு வருகின்றனர்.

அபினய் மனைவி என்ன சொல்கிறார்

அபினய் மனைவி என்ன சொல்கிறார்

இந்நிலையில் அபினய்யின் மனைவி அபர்னா முதல் முறையாக இந்த விவகாரம் பற்றி வாய் திறந்துள்ளார். அபர்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்ப ஃபோட்டோவை பதிவிட்டு, நீ எந்த மாதிரியான ஆள் என்பது எனக்கு தெரியும். என் அளவிற்கு உன்னை யாருக்கும் தெரியாது. லவ் யூ ஆல்வேஸ், லவ். அபர்னா அபினய், அபினய் டீம் எப்போதும் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

நான் நம்புறேன்

நான் நம்புறேன்

ஹவுஸ்மெட்களும், நெட்டிசன்களும் வேறு மாதிரியாக பேசினாலும், தன் கணவர் மீது தான் நம்பிக்கை வைத்திருப்பதாகவும், உலகம் என்ன சொன்னாலும் இந்த விஷயத்தில் தனது கணவரை தான் நம்புவதாக அபர்னா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X