கஜன் மலேசிய தமிழ் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் அபிராமி - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் பங்கேற்ற நடிகை அபிராமி கஜன் என்ற மலேசிய தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிராமி வெளியிட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடமாக விஜய் டிவியால் நடத்தப்பட்டு வருகிறது. மூன்று வருடங்களிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் உலக நாயகன் கமல்ஹாசன்.

Abirami Acts Gajan 1st look poster release

இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகி உள்ளனர். திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்த பல நடிகர் நடிகைகளுக்கு, இந்த நிகழ்ச்சியின் மூலம் மறுவாழ்வும் கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ், ஹரிஷ் கல்யாண், ஓவியா, ஜீலி, ரைசா வில்சன், இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட மும்தாஜ், ஜஸ்வர்யா தத்தா, இரண்டாவது சீசன் டைட்டில் வின்னர் ரித்விகா, ஜனனி, பாலாஜி, மகத், யாஷிகா ஆனந்த் போன்ற பலருக்கும் பல வாய்ப்புகள் தேடி வர காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியின் 3ஆவது சீசனில் கலந்து கொண்ட பலருக்கும் தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதில் முக்கியமான அழகு நாயகி அபிராமி. அவருடைய அடுத்த படம் பத்தி நாம இப்ப பாக்க போறோம்.

அபிராமி ஒரு பரதநாட்டிய கலைஞர். பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் முன் இவர் பல விளம்பரங்களில் வந்திருக்கிறார். அதை நாம் பிக்பாஸ் வீட்டில் அபிராமியை பார்த்த பின்பு தான் பல விளம்பரங்களில் அவர் நடித்திருப்பதை கவனிக்கத் துவங்கினோம்.

அபிராமி அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தார். இந்தப்படம் இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அபிராமியும் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் அபிராமி 8 வாரங்கள் வரை இருந்தார்.

இவருக்கும் முகெனுக்கும் இடையே இருந்த காதல் காட்சிகள் பலராலும் ரசிக்கபட்டது. ஆனால் முகென் அபிராமியின் காதலை ஏற்க மறுக்க, இந்த ஜோடி பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே தன் காதலை முறித்து கொண்டது.

தற்போது அபிராமி மலேசிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அபிராமி படக்குழு பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு கஜன் என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

படத்தை வீடு புரொடக்ஷன்ஸ் உடன் அழகப்பா கறி கிங் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. இப்படத்தில் அபிராமியுடன், தெனஸ் குமார், ஜாஸ்மின் மைக்கேல் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு கதை எழுதி இயக்குகிறார் எஸ்.மதன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X