»   »  சினிமா ஸ்ட்ரைக்... குறுக்குசால் ஓட்டும் அபிராமி ராமநாதன்!

சினிமா ஸ்ட்ரைக்... குறுக்குசால் ஓட்டும் அபிராமி ராமநாதன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாளை தியேட்டர் ஸ்ட்ரைக் இல்லை- வீடியோ

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மார்ச் 16, அதாவது நாளை முதல் படங்களைத் திரையிடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

ஆனால், சென்னை மா நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனோ இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Abirami Ramanathan decides to run the shows

சில தினங்களுக்கு முன் சென்னையில் ரோகிணி ஆர் பன்னீர் செல்வம் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. அதில் 8% கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும், பெரிய திரையரங்குகளில் சீட் குறைக்க அனுமதி தர வேண்டும், தியேட்டர் லைசென்ஸ் மூன்று வருடத்துக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும், திரையரங்கு பராமரிப்புக் கட்டணமாக A/C திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாயும், Non A/C திரையரங்குகளில் 3 ரூபாயும் பிடித்தம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்கு அரசு ஆணை வழங்க ஏற்கெனவே 2017 மே மாதம் நடந்த பேச்சுவார்த்தையின் போது தமிழக அரசு ஒப்புக் கொண்ட அடிப்படையில் ஒரு வார காலத்திற்குள் அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இல்லையேல் மார்ச் 16ஆம் தேதி முதல் எந்தப் படங்களையும் திரையிடாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

Abirami Ramanathan decides to run the shows

இதனால் நாளை (மார்ச் 16) முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்படுகிறது

இந்த நிலையில் சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று (மார்ச் 14) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 147 திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் என்கிறார்கள்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுத்த முடிவின்படி மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட மாட்டோம். ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள மாட்டோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழி படமாக இருந்தாலும் பொது மக்களின் பொழுது போக்குக்காகத் திரையிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்று சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டம் யார் தலைமையில் எங்கு நடந்தது என்பது போன்ற எந்த விவரங்களும் இன்றி பத்திரிகை தொடர்பாளர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

Abirami Ramanathan decides to run the shows

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அபிராமி ராமநாதனின் இந்த அறிவிப்பு வேலைநிறுத்தம் நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது மாநில அமைப்புடன் எப்போதும் இணைந்து செயல்படுவதைத் தவிர்த்து வரும் அபிராமி ராமனாதன் இப்போதும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதையும் தவிர்த்து உள்ளார்.

இப்போதைய சினிமா ஸ்ட்ரைக் பிரச்சினைக்குக் காரணமான டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து ஆர்ப்பாட்டமாக வரவேற்றவர்களில் அபிராமி ராமநாதனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a press release, Abirami Ramanathan has said that he would run the cinema shows despite the ongoing strike.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X