For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னடா சொல்ல வர்ற... ராஜு, பாவனியை கதற விட்ட அபிஷேக்

  |

  சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 03 ம் தேதி துவங்கி, விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் வாரத்தில் எலிமினேஷன் துவங்குவதற்கு முன்பாகவே திருநங்கையான நமீதா மாரிமுத்து வெளியேறி விட்டார். மருத்துவ காரணங்களுக்காக அவர் வெளியேறியதாக கூறப்பட்டாலும், அவர் வெளியேறியதற்கான சரியான காரணம் என்ன என்பது இது வரை தெரியவில்லை.

  சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!

  இரண்டாவது வாரத்தில் நடந்த இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்கில் தாமரை செல்வி வெற்றி பெற்று, தலைவர் ஆனார். எலிமினேஷன் ப்ராசசில் 15 பேர் நாமினேட் செய்யப்பட்டனர். இவர்களில் மிக குறைந்த ஓட்டுக்களைப் பெற்று மலேசிய மாடலான நாடியா சாங் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறி உள்ளார்.

  நாடியா வெளியேற இது காரணமா

  நாடியா வெளியேற இது காரணமா

  எலிமினேஷன் ப்ராசஸ் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மலேசிய தமிழர் ஒருவர் நாடியா சொன்ன கதை முற்றிலும் பொய். அவர் மலேசிய போலீஸ் பற்றிய தகவறான தகவல் சொல்வதாகவும், மலேசிய தமிழர்களின் மானத்தை வாங்கி விட்டதாகவும் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் பரவியது. சின்ன பொண்ணு, அபிஷேக், அபினய் ஆகியோர் தான் குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென நாடியா வெளியேறி உள்ளார். இவர் வெளியேறியதற்கும், அந்த வீடியோவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

  கருத்து கணிப்பு நடத்திய குழு

  கருத்து கணிப்பு நடத்திய குழு

  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கமல் வந்த எபிசோட் ஒளிபரப்பானது. இதற்கு முன் விஜயதசமியை முன்னிட்டு நடத்தப்பட்ட திருவிழா டாஸ்க்கில், இதுவரை ஜொலித்தவர் யார் என ஒருவரையும், காணாமல் போனவர் யார் என இரண்டு பேரையும் கருத்து கணிப்பு நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என அபிஷேக், அக்ஷரா, பாவனி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

  காடட்டமாக பேசிய நாடியா

  காடட்டமாக பேசிய நாடியா

  நேற்றைய எபிசோடில் கமலிடம் முடிவை சொன்ன அபிஷேக், ஜொலித்தவர் இமான் அண்ணாச்சி. காணாமல் போனவர்கள் சின்ன பொண்ணு மற்றும் நாடியா சாங் என்றார். ஆனால் அபிஷேக் சொன்னதை ஏற்க மறுத்த நாடியா, நான் மட்டும் தான் உங்க கண்ணும் தெரியாமல் காணாமல் போனேனா என கமல் முன்னிலையிலேயே காட்டமாக பேசினார்.

  ராஜுவை குழப்பிய அபிஷேக்

  ராஜுவை குழப்பிய அபிஷேக்

  கமல் சென்ற பிறகு, ஜொலித்தவராக ஏன் ராஜுவை தேர்வு செய்யவில்லை என ராஜுவை தனியே அழைத்து சென்று நீண்ட விளக்கம் கொடுத்தார் அபிஷேக். இதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ராஜு கடைசியில், என்னடா சொல்ல வர்ற. ஒண்ணுமே புரியல என்றார். அதற்கு அபிஷேக், உனக்கு புரியாது. ஆனால் நான் சொல்ல வேண்டியது எனது கடமை என்கிறார். ராஜுவிற்கு மட்டுமல்ல இதை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்குமே அபிஷேக் என்ன சொல்ல வருகிறார் என்ற கேள்வி எழுந்தது.

  என்னடா நடக்குது இங்க

  என்னடா நடக்குது இங்க

  இதே போல் பாவனியிடமும், நான் வீட்டின் தலைவராக மதுமிதா வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவளை வீட்டின் தலைவராக்கி, அவளது திறமையை எல்லோரும் உணரும்படி செய்வேன். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும் என மிக ஆவேசமாக பேசினார். அவர் எதற்காக சத்தமாக பேசினார் என தெரியாமல், என்னடா நடக்குது இங்க என அபினய் மற்றும் மதுமிதாவிடம் புலம்புகிறார் பாவனி ரெட்டி.

  இது தான் அபிஷேக் ஸ்டாட்டர்ஜியா

  இது தான் அபிஷேக் ஸ்டாட்டர்ஜியா

  ராஜு மற்றும் பாவனியிடம் மட்டுமல்ல அக்ஷரா போன்ற ஹவுஸ்மேட்கள் பலரிடமும் அபிஷேக், அவர்களை குழப்புவதை போலவே பேசி வருவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இவர் யாரை குழப்புகிறார் ஹவுஸ்மேட்களையா அல்லது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மக்களையா என பலர் கேட்டுள்ளனர். இன்னும் சிலர், ஒருவேளை இப்படி அனைவரையும் குழப்பி விடுவது தான் அபிஷேக்கின் ஸ்டாட்டர்ஜியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  English summary
  In Bigg boss tamil season 5 yesterday's episode, abishek tried to explain raju that why he did not select raju as best extertainer. But abishek confused raju and pawni reddy by the way he talked.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X