twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடிக்க அடிக்க வந்துக்கிட்டேன் இருப்பேன்...பஞ்ச் டயலாக்குடன் கதை சொன்ன அபிஷேக் ராஜா

    |

    சென்னை : பிக்பாஸ் சீசன் 5 துவங்கியதில் இருந்தே நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டவர் யூட்யூப்பர் அபிஷேக் ராஜா. இவர் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றது முதல் இவரின் பழைய வீடியோக்கள், ட்விட்டர் பதிவுகள் என அனைத்தையும் வைத்து கமல் சார் இவனை கொஞ்சம் கவனிங்க என கலாய்த்து வந்தனர்.

    அபிஷேக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவரின் கவனத்தை ஈர்க்க பல விதங்களில் ஏதேதோ செய்து வந்தார். ஹவுஸ்மெட்கள் பற்றி ரெவ்யூ கொடுத்தார். இதே போல் கமலும் அபிஷேக்கிடம் ரெவ்யூ கேட்டார். இது அண்ணாச்சி உள்ளிட்ட பலரிடம் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10 ம் நாளான இன்று அபிஷேக் அனைவரின் முன்னிலையிலும் தனது கதையை சொன்னார்.

    அப்போது நான் சினிமா பையன் என்ற அபிஷேக் ராஜா. சொந்த ஊரு மதுரை. ஒரு குறிப்பிட்ட வயது வரை கண்ணுக்கு தெரியாத என் அப்பா தான் என் உலகம். நினைவு தெரிந்த பிறகு உலகமே உறவானது. எங்க அப்பா நாங்க தூங்கின பிறகு தான் வருவார். நான் எழுவதற்கு முன்பே கிளம்பி சென்று விடுவார். அதனால் புல்லட்டை தான் எங்க அப்பா என நினைத்துக் கொண்டிருந்தேன். புல்லட் சத்தம் கேட்டா தான் அப்பா வீட்டுக்கு வந்துட்டார் என நினைத்துக் கொள்வேன்.

    Abishek Raaja shared with his story emotionally with punch dialogues

    நான் எப்படிப்பட்ட பையன் என்றால், ஆசைப்பட்ட ஒரு விஷயத்திற்காக உழைப்பை போடு. அது கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை என விட்டு விடு. கிடைத்தால் சந்தோஷம், கிடைக்கலன்னா ரொம்ப சந்தோஷம் என்னும் கேரக்டர். அந்த வார்த்தைகள் என்னை வளர்த்துக் கொண்டு வந்தது. அப்பா இல்லை என்றாலும் அவரின் மீதான அன்பு தான் என்னை வழிநடத்திக் கொண்டே இருக்கு.

    எங்க அம்மாவோட கனவில் இருந்து சிந்திய இரண்டு மணித்துளிகள் தான் நானும் என் அக்காவும். மதுரையில் பிறந்து வளர்ந்ததால் சுற்றி பார்க்க பெரிய இடங்கள் ஏதும் கிடையாது. அதனால் சினிமா தான் எனது முக்கிய பொழுதுபோக்காக இருந்தது. படிப்பு பிளஸ் பொழுதுபோக்காக சினிமா இருந்தது. ஒரு குறிப்பிட்ட வயதில் குரூப் ஃபோட்டோ அனைத்திலும் நான் புலி மாதிரியே இருக்கேன்.

    புலி மாதிரியே நடக்கிறேன். புலி மாதிரியே அனைத்தையும் செய்கிறேன். குரூப் ஃபோட்டோல இவன் மானத்த வாங்குறானேன்னு எங்க, அப்பா, அம்மா, அக்கா முகத்தில் இல்லவே இல்லை. இது புலி முகம். அதனால் அவர் புலியாத்தான் இருப்பான். அப்படி தான் என்னை வளர்த்தார்கள். நீ நீயாக இருந்தால் உலகம் உனக்கு ஏற்றது போல் மாறி விடும் என்பதை கற்றுக் கொண்டேன்.

    எங்க அப்பா, அம்மா சொல்வதை எல்லாம் கேட்பார். ஆனால் கடைசியில் அவர் நினைப்பதை தான் செய்வார். ஆனால் சொல்வதை எல்லாம் கேட்பதாக ஒரு தோற்றத்தை அம்மாவுக்கு ஏற்படுத்துவார். ஒரு நாள் வேலையை நான்கு நாட்கள் செய்வதாக சொல்விட்டு நன்றாக ஜாலியாக இருந்து விட்டு வருவார். அதனால் எங்க அப்பா இறந்தப்போ கூட பெரிதாக எனக்கு வருத்தம் இல்லை. அவர் தன் வாழ்க்கையை சூப்பராக வாழ்ந்தார். இறந்தார்.

    Recommended Video

    Akshara Reddy ஒரு குழந்தை | Akshara அம்மா & அண்ணன் Shravan

    நல்லா வாழ்ந்து கெட்ட குடும்பம். எங்க அப்பா கர்ணன் போல, அடுத்தவங்களுக்கு கொடுக்குறதுக்காகவே சம்பாதித்தவர். எங்க அப்பாவோட மைண்ட் வாய்ஸ் தான் இப்பவும் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. வலியை ரசிக்க வேண்டாம். ஆனால் வலிமை ஏற்றுக் கொள்ள பழகிக்கனும். பிரச்சனை வந்தால் அதை சமாளிப்பதற்கான திறனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

    எங்க அப்பா இறந்த போது நான் 4 மாதங்கள் அழுகவே இல்லை. பண்ணாத வேலைகள் இல்லை. அம்மாவின் நகை, எனது வாழ்நாள் உழைப்பை போட்டு எங்கப்பா சம்பாதித்த கட்டிடத்தை இரண்டே வருடத்தில் மீட்டெடுத்தேன். இப்போது எங்க அப்பா வைத்திருந்த புல்லட் மட்டும் தான் என்னோட சொத்து. நான் திருமணம் செய்து கொண்டு தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலையால் எங்க அப்பாவை என்னால் கூட வைத்து பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால் எங்க இறப்பதற்கு நானும் காரணம் என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நான் ஆவியாக அழைந்தாலும் அந்த குற்ற உணர்ச்சி இருக்கும்.

    8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா! 8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா!

    எங்க அப்பா எங்கே போய்ட போறாருன்னு நினைச்சு இருந்துட்டேன். மக்கள் செல்வாக்கோடு ராஜா போல் வாழ்ந்தவர் எங்க அப்பா. அவரை நாங்கள் தான் சரியாக உணரவில்லை. அடிக்க அடிக்க வந்துகிட்டே தான் இருப்பேன். என்னை எப்போதும் எங்கேயும் புறக்கணிக்க முடியாது என பஞ்ச் டயலாக்குடன் தனது வாழ்க்கையை சொல்லி முடித்தார் அபிஷேக் ராஜா

    English summary
    Bigg boss tamil season 5 today episode abishek raaja shared his story with housemates. he emotionally talks with punch dialogues. he ends with his story with a dialoguem never ever ignore me.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X