அப்பா கதை சொல்ல சொன்னா ஆவி கதை சொல்றானே.. டிக்கிலோனா மீம் போட்டு அபிஷேக்கை கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: சினிமா பையன் எனும் பெயருக்கு ஏற்றவாறு தனது சொந்த சோக கதையை கூறும் போதும் ஏகப்பட்ட எஃபெக்ட்களை போட்டு கதை சொன்னார் அபிஷேக் ராஜா.
அதிலும், அப்பாவின் மரணம் போன்ற சென்சிட்டிவான விஷயத்தை சொல்லும் போது, அதில் ஆவி கதையை கலந்து அவர் சொன்னது பல பிக் பாஸ் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
டிக்கிலோனா படத்தில் வரும் "இன்னும் நீயென்ன பைத்தியம்னே நினைச்சிட்டு இருக்கல" எனும் வசனத்தை போட்டு பலமாக கலாய்த்து வருகின்றனர்.

ஏகப்பட்ட எஃபெக்ட்
சினிமாவில் நடிகர்கள் சண்டை போடும் போது ஏகப்பட்ட எஃபெக்ட்கள் கொடுப்பார்கள் காமெடியாக இருக்கும் என ரஜினிகாந்த், சரத்குமார், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களை ராஜு ஜெயமோகன் உடன் இணைந்து கலாய்த்த அபிஷேக் ராஜா அவர் தனது சோக கதையை சொல்லும் போது ஏன் ஏகப்பட்ட எஃபெக்ட்களை போட்டு பேசினார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அப்பாவோட ஆவி
எல்லாவற்றுக்கும் மேலாக, அப்பா இறந்து போன துக்கமான தருணத்தை கூட "எங்க அப்பாவோட ஆவி அப்படியே எங்க அம்மா உடம்புக்குள்ள போறத நான் பார்த்தேன்" என அபிஷேக் ராஜா பேசியதை பார்த்து நொந்து போன பிக் பாஸ் ரசிகர்கள் "இன்னும் நீ என்ன பைத்தியம்னே நினைச்சிட்டு இருக்கல" என டிக்கிலோனா மீமை போட்டு பங்கம் பண்ணி உள்ளனர்.

கோரிப்பாளையம் ரோட்டுல
"கோரிப்பாளயம் ரோட்டுல புல்லட்ல போய்ட்டு இருக்கும் போது என்ன ஒருத்தன் அப்படியே சட்டைய புடிச்சி தூக்குனான்" என அபிஷேக் சொன்ன கதையை எல்லாம் கேட்ட இந்த நெட்டிசன் இறைவா என்னை கொன்னுடு என கர்ணன் பட மீமை போட்டு வேற லெவலில் கலாய்த்து தள்ளி உள்ளார்.
Recommended Video

அபிஷேக் வெளியேறுவாரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வருவதற்கு முன்னர் அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அதனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் குறித்தும் படு மோசமாக பேசிய வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி ஆரம்பத்திலேயே அபிஷேக் ராஜாவின் முகத்திரையை கிழித்து விட்டனர். அதன் காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் மிகவும் குறைவான வாக்குகளே விழுந்துள்ளதாகவும் சின்ன பொண்ணுவுக்கும் அடுத்த இடத்தில் அதாவது கடைசி இடத்தில் அபிஷேக் ராஜா இருப்பதாகவும் ஓட்டுப் படி பார்த்தால் இந்த வாரம் அவர் தான் வெளியேறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











