Don't Miss!
- News
வட இந்தியா பாணியில் தமிழகத்திலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு-மதுரையில் திரளுகின்றனர்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Finance
கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீக்கமா? மத்திய அமைச்சர் தகவல்
- Automobiles
ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பூதாகரமாக ஆக்குறீங்களாம்.. நிரூப்பிடம் உஷாரா இருங்க பிரியங்கா.. தரமான ஃப்ரீ அட்வைஸ் தந்த அபிஷேக்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் தனக்கு நிரூப் உடன் தான் கம்ஃபோர்ட் ஜோன் இருக்கு என தொடர்ந்து பிரியங்கா மட்டுமே சொல்லி வருகிறார்.
ஆனால், பிரியங்கா தன்னை வைத்து பக்காவாக கேம் ஆடுகிறாரோ என்கிற சந்தேகம் தனக்கு இருப்பதாக கமல் முன்பாகவே நிரூப் போட்டு உடைத்து விட்டார்.
இந்நிலையில், நிரூப்பிடம் கொஞ்சம் உஷாராவே இருந்த பிரியங்கா என தரமான அட்வைஸ் கொடுத்துள்ளா பிரியங்கா.
பிரம்மனோட ஸ்பெஷல் புராடெக்ட்.. பிரியங்கா மோகன் பிறந்தநாள்.. டிவிட்டரை தெறிக்கவிடும் ஃபேன்ஸ்!

அடக்கி வாசிக்கும் அபிஷேக்
ருத்ர தாண்டவம் ஆடப் போறேன், என்னோட பரத நாட்டியத்தை பார்க்க போறீங்க என இரிடேட் செய்து இரண்டாவது வாரத்திலேயே எக்ஸிட் ஆன அபிஷேக் ராஜா பூமரங் மாதிரி மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நிலையில், ரொம்பவே அடக்கி வாசித்து வருகிறார். ஓவரா பேசி தான் என்னைய வெளியே அனுப்பிட்டாங்க என அபிஷேக் புலம்பியதையும் எடிட்டர் அழகாக எடுத்துப் போட்டு விட்டார்.

பிரியங்கா பிரைன் வாஷ்
பாவனி தனக்கு காயின் கொடுத்து சேவ் பண்றா என பிரியங்காவிடம் அபிஷேக் சொல்ல மறுபடியும் நீ இந்த வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்டால் கிளம்பிவிடு காயினை எல்லாம் பயன்படுத்தாதே என பிரியங்க அபிஷேக்கை பிரைன் வாஷ் பண்ண மீண்டும் பாவனியிடமே அந்த காயினை கொடுத்து விட்டார் அபிஷேக்.

சிம்பதி ஓட்டு
பாவனிக்கு என்னவொரு நல்ல மனசுப்பா அக்ஷரா அத்தனை வாரங்களாக தேடியும் பாவனியின் பில்லோ பின்னாடி இருந்த காயினை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், அபிஷேக் வந்த உடனே உன்னை மறுபடியும் மக்கள் வெளியே அனுப்ப பார்ப்பார்கள் நீ காயினை வைத்து சேவ் ஆகிடு என கொடுத்து சிம்பதி ஓட்டுக்களை அள்ள பார்த்தார் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அபிஷேக் அதனை மீண்டும் பாவனிக்கே கொடுத்து விட்டார்.

பூதாகரம் ஆக்கிடுவா
சின்ன விஷயத்தையும் சத்தமாக பேசி ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸையும் காட்டி அந்த விஷயத்தை பூதாகரமாக மாற்றி விடுவாள் பிரியங்கா என பிரியங்கா பற்றி நிரூப் கமல் முன்பாக பங்கமாக பேசி கலாய்த்து விட்டார். மேலும், பிரியங்கா பக்காவான ஸ்ட்ராட்டஜியுடன் தான் தன்னிடம் பேசுகிறார், பழகுகிறார் என தெரிவதாகவும் கூறி நட்பை கலங்கப்படுத்தி விட்டார்.

அபிஷேக் எச்சரிக்கை
இந்நிலையில், கமல் முன்பாகவே நீ ஒரு விஷயத்தை பூதாகரமாக ஊதி பெரிதாக்கி விடுவாய் என தனது கருத்தை திணித்து உன்னை காலி பண்ண பார்க்கிறான் நிரூப் அதனை நீ புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என அபிஷேக் ராஜா வந்த உடனே தரமான ஃப்ரீ அட்வைஸை கொடுத்து தொடர்ந்து பிரியங்காவுடன் ஒட்டிக் கொண்டிருந்தால் தான் கேமராவில் தெரிவேன் எனும் தனது பழைய ஸ்டேட்மென்ட்டை நிரூபித்து வருகிறார்.