Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- News
சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம்... புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம்
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Finance
கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீக்கமா? மத்திய அமைச்சர் தகவல்
- Automobiles
ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மக்கள் எதிர்பார்க்கிற சுவாரஸ்யத்தை என்னை கொளுத்திட்டு கொடுப்பேன்.. நிரூப்பிடம் ஆவேசமான அபிஷேக்!
சென்னை: நிரூப்பை எப்படியாவது வெளியேற்றி விட்டு பிரியங்காவுடன் சேர்ந்து கடைசி வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயணிக்கலாம் என நேற்று அபிஷேக் திட்டம் போட்ட நிலையில், இன்று அதற்கான வேலையை ஆரம்பித்துள்ளது மூன்றாவது புரமோவில் தெரிகிறது.
நிரூப், பிரியங்கா என 60 நாளும் பிக் பாஸ் நிகழ்ச்சி செல்வது பிடிக்கவில்லை என்று அபிஷேக் தெளிவாக நிரூப்பிடம் சொல்லி விட்டார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த நிலையில், நீங்க மட்டும் ஏன் அதே அபிஷேக்கா பிரியங்கா நிழலிலேயே இருக்க ஆசைப்படுறீங்க அபிஷேக் என ரசிகர்கள் அபிஷேக்கை வெளியேற்ற ரெடியாகி விட்டனர்.
எந்த
ஆதாரமும்
இல்லை..
நடிகை
அளித்த
பாலியல்
புகாரில்
3
ஆண்டுகளுக்குப்
பிறகு
நடிகர்
அர்ஜூன்
விடுதலை!

நரித்திட்டம்
பிரியங்கா ஆரம்பத்திலேயே அபிஷேக்கிடம் பேசக் கூடாது, பழகக் கூடாது என உஷாராக இருந்தார். ஆனால், தனது பேச்சுத் திறமையால் பிரியங்காவை அபிஷேக் ஏமாற்றி பிரியங்காவின் நட்பை பெற்றுக் கொண்டார். ஆனாலும், அபிஷேக்கின் நரித்திட்டத்தை புரிந்து கொண்ட பிக் பாஸ் ரசிகர்கள் அவருக்கு ஓட்டுக்களை போடாமல் வெளியே அனுப்பி விட்டனர்.

மீண்டும் பொய்
பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்க்கவில்லை என கமல் சார் பல முறை கேட்டும் சத்தியம் பண்ணாத குறையாக மறுத்த அபிஷேக், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் அந்த ஷோவை பார்க்கவே இல்லை என ரம்யா கிருஷ்ணன் கடந்த வாரம் கேட்ட போதும் இல்லவே இல்லை என சாதித்தார். அபிஷேக் தனது போர்ஷனை மட்டும் நண்பர்கள் மூலமாக பார்த்தேன் என ரம்யா கிருஷ்ணன் திரும்ப திரும்ப கேட்டதும் சொன்னதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் என்னமா பொய் பேசுகிறார் அபிஷேக் என விளாசினர்.

வெளியே போயிடு
நேற்றைய எபிசோடில் பிரியங்காவிடம் எப்படியாவது தன்னை இறுதி வரை கூட்டிட்டுப் போயிடு என அபிஷேக் கெஞ்சிய நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் 3வது புரமோவில் நிரூப் உனக்கு வேண்டாம் என்றால் நீ இந்த வாரமே வெளியே போயிடு என அடுத்த வாரம் நிரூப்பை வெளியேற்ற இப்பவே ஐடியா பண்ண ஆரம்பித்து விட்டார்.

60 நாளும் இதே தான்
இந்த வாரம் அண்ணாச்சியை கேப்டனாக ஆக்கி விட்டு அடுத்த வாரம் நீ இந்த காயினை யூஸ் பண்ணியிருந்தால் நல்லா இருந்திருக்கும். அதை விட்டுட்டு 7 நாளும் உனக்கு எக்ஸ்ட்ரா சலுகை ஏன் வேண்டும் என நினைக்கிற என பேசிய அபிஷேக். 60 நாளும் நிரூப், பிரியங்கா என்றே ஷோ ஓடுவது சுத்தமாக பிடிக்கவே இல்லை எனக் கூறினார்.

என்னை கொளுத்திக் கொண்டு
பிக் பாஸ் வீட்டில் கொளுத்திப் போடுவது என்கிற வார்த்தை சண்டையை மூட்டி விடுவதற்காக சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு வார்த்தை. ஆனால், நிரூப்பிடம் பேசிக் கொண்டிருந்த அபிஷேக் உச்சகட்டமாக மக்கள் எனக்கு பிச்சை போட்டு ரெண்டாவது வாய்ப்பை கொடுத்திருக்காங்க.. என்னை கொளுத்திக் கொண்டாவது அவங்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பேன் என பேசிய புரமோவை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் எரிச்சல் அடைந்துள்ளனர்.

இந்த வாரம் இவர் தான்
பிக் பாஸ் வீட்டுக்கு மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அபிஷேக் ராஜா கடந்த ஆண்டு புதுவரவு என தப்பித்துக் கொண்டார். இந்த வாரம் நாமினேஷனில் உள்ள அவர் தான் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ளார். மறுபடியும் கூட்டி வந்து பிக் பாஸ் டீம் அவரை இந்த வாரம் வெளியே அனுப்பி மொக்கைப் பண்ண போகிறது என்றும் நெட்டிசன்கள் மூன்றாவது புரமோவை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.