அய்யோ நான் அவரை சொல்லல.. 100 நாள் சிஎம் மேட்டர் குறித்து அடடே விளக்கம் கொடுத்த அபிஷேக் ராஜா!

சென்னை: அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அளித்துள்ள பேட்டியில் ஏகப்பட்ட கன்டென்ட்கள் சிக்கியுள்ளன.

செத்தும் கொடுப்பான் சீதக்காதி என்பது போல பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும் கன்டென்ட் கொடுக்கும் ஒரே ஆள் அபிஷேக் ராஜா தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பட்டிமன்றத்தில் அபிஷேக் ராஜா விமர்சித்து பேசிய வீடியோ வைரலாந்து குறித்த கேள்விக்கும் அசராமல் பதில் அளித்துள்ளார் அபிஷேக்.

வேட்டு வைத்த வீடியோ

வேட்டு வைத்த வீடியோ

அபிஷேக் ராஜா நாம விளையாடும் விளையாட்டுக்கு இந்த வீட்டில் 100 நாட்கள் வரை இருந்து விடலாம் என பக்காவாக பிளான் போட்டு டாப் 5 போட்டியாளர்களில் தானும் ஒருவர் என கனவு கண்டிருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பட்டிமன்றத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அபிஷேக் ராஜா கழுவி ஊற்றிய வீடியோவை அவர் உள்ளே சென்றதும் நெட்டிசன்கள் வைரலாக்கி அவர் ஒரு போலியான நபர் என முத்திரை குத்தி விட்டனர்.

கமலுக்கு தெரிந்து தான்

கமலுக்கு தெரிந்து தான்

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் கமல் சார் குறித்தும் அபிஷேக் ராஜா விமர்சித்து விட்டு அந்த நிகழ்ச்சிக்கே போட்டியாளராக எப்படி சென்றார் பிக் பாஸ் குழுவுக்கும் கமல் சாருக்கும் இந்த வீடியோவை டேக் செய்யுங்க என நெட்டிசன்கள் செய்த தரமான செய்கையால் கமல் அந்த வீடியோவை பார்த்திருப்பார் என்றும் அபிஷேக்கை காயின் வைத்து காப்பாற்றாமல் விட்டதற்கும் அதுதான் காரணம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கமல் சாரை சொல்லல

கமல் சாரை சொல்லல

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக் ராஜாவை பேட்டி எடுத்த ஜோ மைக்கேல் அந்த கேள்வியையும் விட்டு வைக்காமல் ஆரம்பத்திலேயே கேட்டு அபிஷேக்கை காலி செய்வார் என எதிர்பார்த்தால், எந்த கேள்வி கேட்டாலும் பாக்கெட்டிலேயே பதில் வைத்திருக்கும் அபிஷேக் ராஜா, அய்யோ நான் கமல் சாரையே சொல்லல புரோ வேறு ஒரு நபரைத் தான் சொன்னேன் என்று பல்டி அடித்து விட்டார்.

ஓவியாவை சொன்னேன்

ஓவியாவை சொன்னேன்

யாரை சொன்னீங்க என கேட்டதற்கு கமல் சாரை சொல்லல, அப்போதைக்கு ஓவியா தான் சிஎம் என்கிற ஹாஷ்டேக் டிரெண்டாகி கொண்டிருந்தது. அவரை குறிப்பிட்டுத் தான் அப்படி பட்டிமன்றத்துக்காக பஞ்ச் போட்டு பேசி விட்டேன் என விளக்கம் அளித்துள்ளார்.

ஓவியாவை எப்படி நம்புறாங்க

ஓவியாவை எப்படி நம்புறாங்க

ஓவியா பிக் பாஸ் வீட்டில் எப்படிங்க உண்மையா இருந்தாருன்ன்னு சொல்றீங்க அதை எப்படி ரசிகர்கள் நம்புறாங்க என கேள்வி எழுப்பும் அபிஷேக் அவர் மட்டும் பிக் பாஸ் வீட்டில் நடிக்காமல் உண்மையாக இருந்தேன் என சொல்வதை எப்படி நம்ப முடியும். இது தொடர்பாக ஓவியா ஒரு ட்வீட் போட்டு அபிஷேக்கை விளாசுவாரா என்று வெயிட் பண்ணி பார்ப்போம்.

அது இடிக்குதே பாஸ்

அது இடிக்குதே பாஸ்

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 வருஷம் ஆகுது. அபிஷேக் ராஜா பட்டி மன்றத்தில் பேசி 2 வருஷம் ஆகுது. ஆனால், ஓவியாவை தான் குறிப்பிட்டேன் கமலை குறிப்பிடவில்லை என்று அபிஷேக் ராஜா சத்தியம் பண்ணாத குறையாக பேசியதும் அது இடிக்குதே பாஸ் அதற்கும் கமெண்ட் அடித்து அவரை மடக்கி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X