For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக் பாஸ் 5: இந்த சீசனில் 2வது முறையாக வெளியேறிய ஆண் போட்டியாளரும் அபிஷேக் ராஜா தான்.. ஏன்?

  |

  சென்னை: பிக் பாஸ் வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

  தமிழ் ரசிகர்களுக்கு இது முற்றிலும் முதன்முறை அனுபவம் தான். இந்த சீசனில் இதுவரை வெளியான ஒரே ஆண் போட்டியாளர் அபிஷேக் ராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் பார்க்கவே இல்லை என தொடர்ந்து சொல்லியது தான் காரணமா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  திடீரென சனிக்கிழமை பிக் பாஸ் வீட்டில் நடந்ததை காட்டிய கமல்.. எல்லாம் அந்த விஷயத்துக்காகத்தானா?திடீரென சனிக்கிழமை பிக் பாஸ் வீட்டில் நடந்ததை காட்டிய கமல்.. எல்லாம் அந்த விஷயத்துக்காகத்தானா?

  சேவ் ஆன வரிசை

  சேவ் ஆன வரிசை

  முதலாவதாக நேற்று ராஜு சேவ் ஆன நிலையில், இரண்டாவதாக பிரியங்கா சேவ் ஆனார். மூன்றாவதாக பாவனி, நான்காவதாக சிபி, அடுத்து தாமரை, இமான் அண்ணாச்சி மற்றும் அக்‌ஷரா என வரிசையாக சேவ் ஆனார்கள். இதன் மூலம் பிக் பாஸ் ஹவுஸ்மேட்களுக்கு வெளியே இருக்கும் ரசிகர்கள் சப்போர்ட் தெளிவாக உள்ளேயும் தெரிந்திருக்கும்.

  அபிஷேக் ராஜா வெளியேற்றம்

  அபிஷேக் ராஜா வெளியேற்றம்

  கடைசி மூன்று இடத்தில் அபிஷேக் ராஜா, வருண் மற்றும் அபிநய் இருந்தனர். அதில் எவிக்‌ஷனை அறிவிக்கவும் இந்த முறை பிரேக்கிங் நியூஸ் ஃபார்மட்டையே கமல் பயன்படுத்தினார். அபிஷேக் ராஜா தான் இந்த வாரமும் வெளியேறுகிறார் என்பது இன்று காலை ஷுட்டிங் நடத்திய போதும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே லீக் ஆகி விட்டது.

  ஓட்டு எப்படி போடுறாங்க

  ஓட்டு எப்படி போடுறாங்க

  கேமை பார்த்து மக்கள் ஓட்டுப் போடுறாங்களா? அல்லது ஒருவரது கேரக்டரை பார்த்து ஓட்டுப் போடுறாங்களா? இல்லை மக்கள் ஓட்டு ஒரு புறம் இருக்க பிக் பாஸ் குழுவே எவிக்‌ஷனை தீர்மானிக்கிறதா? என ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல் இந்த நிகழ்ச்சியில் நிலவி வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

  போன தடவை

  போன தடவை

  முதல் முறை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த போது அனைவரையும் அபிஷேக் ராஜா இன்ஃப்ளூயன்ஸ் பண்ண முயற்சித்தார். கமல் பற்றியும் பிக் பாஸ் பற்றியும் தப்பாக பேசினார் என பரவிய வைரல் வீடியோ, பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்த்தது இல்லை என கமல் முன்பாக அவர் தொடர்ந்து வலியுறுத்தி பேசியது என ஏகப்பட்ட விஷயங்கள் அவரை வெளியே அனுப்பியது.

  நல்லா விளையாடியும்

  நல்லா விளையாடியும்

  ஆனால், இந்த முறை மீண்டும் வந்த அபிஷேக் ராஜா கடந்த வாரம் மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியராக இருந்தார். இந்த வாரம் பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் டைட்டில் வின்னர் என கருதப்படும் ராஜுவையே தூக்கி சாப்பிட்டு தனது முழு திறமையையும் காட்டினார். ஆனாலும், மக்கள் ஓட்டு ஏன் போடவில்லை என பிரியங்காவை போலவே ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  கமல் அட்வைஸ்

  கமல் அட்வைஸ்

  நாம் செய்வது எல்லாம் சரியென நினைத்து தவறான ஒன்றை செய்து கொண்டிருக்கக் கூடாது. என் இளமை காலத்திலும் நான் பல தவறுகளை செய்திருக்கிறேன். இப்போது அதை நினைத்து வருந்தியிருக்கிறேன் என்று வெளியேறிய அபிஷேக்கிற்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல அட்வைஸ் கொடுத்தார். இப்போவாவது வீட்டுக்கு போய் பிக் பாஸ் பாருங்க என அபிஷேக் ராஜாவிடம் அழுத்தி கமல் சொன்னது தான் அவர் மீண்டும் வெளியேற காரணமா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

  அபிஷேக் பாவம்

  அபிஷேக் பாவம்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நமீதா மாரிமுத்து, நாடியா சங், சின்ன பாப்பா, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி என பெண் போட்டியாளர்களே அதிகளவில் எலிமினேட் ஆகி உள்ளனர். இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஒரே ஆண் போட்டியாளர் அபிஷேக் ராஜா தான். அபிநய், வருண், இமான் அண்ணாச்சி, நிரூப் ஏன் ராஜுவை விடவும் அபிஷேக் ராஜா திறமையான போட்டியாளர் என அபிஷேக் ராஜாவின் எவிக்‌ஷனை பார்த்த மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

  பெரிய வாய்ப்பு

  பெரிய வாய்ப்பு

  நிச்சயம் விஜய் டிவியில் பெரிய ஷோவை எடுத்து நடத்தும் தொகுப்பாளராகும் வாய்ப்பு அபிஷேக் ராஜாவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேக் ராஜாவின் ஆற்றலை அவர் அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கலக்குவார் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

  English summary
  Abishek Raja is the only male contestant once again evicted from the Bigg Boss Tamil 5 house upsets fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X