சம்பவம் பண்ண போறேன்...விளையாடவே ஆரம்பிக்கல...அபிஷேக் யாரை சொல்கிறார் ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது வார இறுதி எபிசோட் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கமல் வரும் இந்த எபிசோட்டில் இந்த சீசனின் முதல் எவிக்ஷன் நடைபெற உள்ளது. வெளியேற்றப்பட்டவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

நேற்றைய சனிக்கிழமை எபிசோட்டில் நாமினேட் செய்யப்பட்ட 15 பேரில் 10 பேர் சேவ் ஆகி விட்டதாக கமல் கூறினார். மீதமுள்ள அபிஷேக், சின்ன பொண்ணு, நாடியா சாங், வருண், மதுமிதா ஆகிய ஐந்து பேரும் சேவ் செய்யப்படாமல் இருக்கின்றனர். இந்த 5 பேரில் வெளியேற போவது யார் என்பதை இன்று அறிவிக்க போகிறார் கமல்.

இந்நிலையில் நிகழ்ச்சி துவங்கியது முதலே வீட்டில் உள்ளவர்களை ரெவ்யூ செய்து கொண்டும், அவ்வப்போது மட்டும் காமெடி செய்து வந்த அபிஷேக் நேற்று காட்டப்பட்ட வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடந்ததில் டெக்ஷனாகி பேசுகிறார். இதனால் அவர் யாரை சொல்கிறார், யாருடன் அவருக்கு என்ன பிரச்சனை, அவர் எதை குறிப்பிட்டு சொல்கிறார் என தெரியாமல் அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர்.

டெக்ஷனாகி கத்தும் அபிஷேக்

டெக்ஷனாகி கத்தும் அபிஷேக்

நேற்று வியாழக்கிழமை நடந்தவை காட்டப்பட்டது. அதில் விஜயதசமி கொண்டாட்டத்துடன், சின்ன பொண்ணு பிரச்சனை ஆகியவை நடந்தது. இதில் நடந்த குழப்பம் பற்றி சின்ன பொண்ணுவிடம் விளக்கம் கொடுக்க வேண்டாம் என அபிஷேக்கிடம் சொல்கிறார் பிரியங்கா. ஆனால் அதையும் மீறி விளக்கம் கொடுக்கிறேன் என்று போய் சத்தமாக கத்தும் அபிஷேக், அதை பற்றி கேட்டு சமாதானம் செய்ய வரும் தாமரை, அக்ஷரா, ஐக்கி ஆகியோரை, உங்கள் வேலையை பாருங்கள் என திட்டுகிறார்.

ஆட்டம் ஆட போகிறேன்

ஆட்டம் ஆட போகிறேன்

பிறகு கார்டனில் பேசுகையில் நிரூப், பிரியங்கா மற்றும் அபினய்யிடம், ஒரு குழப்பம் நடந்திருக்கு. அது உறுதியானால் நான் ஒரு ஆட்டம் ஆடுவேன். அப்படி நடந்தால் நீங்கள் யாரும் தடுக்க, குறுக்கே வராதீர்கள். ஒரு கதகளி ஆட்டம் இருக்கு என்கிறார் அபிஷேக். இதனால் அபிஷேக், ராஜு மீது தான் கோபப்பட்டு இப்படி பேசுகிறாரோ என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

சம்பவம் பண்ண போறேன்

சம்பவம் பண்ண போறேன்

ஆனால் அடுத்த நாள் காலை ராஜுவிடம் தனியே பேசும் அபிஷேக், வீட்டுல ஒரு சம்பவம் பண்ண போறேன். பரதநாட்டியம் ஆட போறேன். இது பற்றி பிரியங்கா, நிரூப், அபினய் கிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கிறேன். அப்படி ஏதாவது நடந்து என்னை என்னால் கன்ட்ரோல் பண்ண முடியாவிட்டால் நீ பார்த்துக்கோ என்றார். அதை சீரியசான முகத்துடன் கேட்கும் ராஜு, குளிச்சுட்டியா. குளிக்கலைனா போய் குளி. எல்லாம் சரியாகி விடும் என கலாய்த்து விட்டு போகிறார். இதனால் அப்போ அபிஷேக் சொல்லுற ஆளு ராஜு இல்லையா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

நான் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கல

நான் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கல

இதே போல் இரவில் தனியாக அமர்ந்திருக்கும் பாவனியிடம் போய் பேசும் அபிஷேக், நான் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கல. நான் விளையாட ஆரம்பிச்சா வீட்டுல ஒருத்தன் கூட இருக்க மாட்டான். எல்லோரையும் ஓட விட்டுடுவேன் என ஆவேசமாக பேசுகிறார்.

யாரை சொல்கிறார் இவர்

யாரை சொல்கிறார் இவர்

இதை பார்த்து விட்டு நெட்டிசன்கள் பலர், இவர் அப்படி யாரை தான் சொல்றாரு. அண்ணாச்சியையா, தாமரையையா, அக்ஷராவையா இல்லை சின்ன பொண்ணுவையா என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளனர். இன்னும் சிலர், வடிவேலு ஸ்டைலில் டயலாக் எல்லாம் நல்லா தான் தம்பி இருக்கு. ஆனால் எங்களால சீரியசா எடுக்க முடியல என மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.

தப்பிச்சுட்டோம்னு தைரியமா

தப்பிச்சுட்டோம்னு தைரியமா

இன்னும் சிலர், டேஞ்சர் ஜோனில் இருப்பதாகவும், அபிஷேக் தான் முதல் ஆளாக வெளியேற போகிறார் என சொல்லப்பட்ட வரை அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அபிஷேக்கை விட சின்ன பொண்ணு தான் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளார். அவர் தான் முதலில் வெளியேற போகிறார் என்றும், பிறகு சின்ன பொண்ணு கிடையாது நாடியா சாங் தான் முதலில் வெளியேற போகிறார் என பெரும்பாலான தகவல்கள் வெளியானதுமே அபிஷேக் ஓவரா சவுண்ட் கொடுக்குறாரே. தப்பிச்சுட்டோம்னு தைரியமா தம்பி என கலாய்த்துள்ளனர்.

இவருக்கு எப்படி தெரியும்

இவருக்கு எப்படி தெரியும்

அதே சமயம், தான் டேஞ்சர் ஜோனில் இருந்து தப்பித்து விட்டோம். இந்த வாரம் தான் வெளியேற போவதில்லை என்ற தகவல் அபிஷேக்கிற்கு எப்படி தெரியும். அப்படியானால் வெளியில் இருப்பவர்களுடன் அவர் தொடர்பில் இருக்கிறாரா. அப்போ இதுவும் ஸ்கிரிப்டா என சந்தேகம் கிளப்பி வருகின்றனர் நெட்டிசன்கள் பலர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X