»   »  படுக்கையில் கிடந்த வினு சக்கரவர்த்தியை நடக்க வைத்த அபூர்வ மகான்!

படுக்கையில் கிடந்த வினு சக்கரவர்த்தியை நடக்க வைத்த அபூர்வ மகான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து அபூர்வ மகான் என்ற படம் உருவாகிறது. இதில் சாய்பாபாவாக நடிக்கிறார் தலைவாசல் விஜய்.

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டிஎன்எஸ் செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகிறது இந்தப் படம்.

Aboorva Mahan based on Shirdi Saibaba

இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர் மனோகர், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வி தஷி இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ஆர்.மணிமுத்து.

படம் குறித்து மணிமுத்து கூறுகையில், "சீரடி பாபாவின் அபூர்வ செயல்களை பற்றி நிறைய பேர் நிறைய சம்பவங்களை சொல்வார்கள். அவர் வாழ்கையையும், இன்றைய காலகட்டத்தையும் இணைத்து கதை உருவாக்கப் பட்டுள்ளது.

படத்தை பார்க்கிற யாருமே உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியாது. ஒரு கதாப்பாத்திரத்திற்காக வினு சக்கரவர்த்தியைப் பார்க்க போனோம். அவரால் நடக்கவே முடியாது எப்படி நடிக்க வைப்பீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். நான் போனபோது அவர் படுக்கையில் படுத்திருந்தார். நான் கதாப்பாத்திரத்தைச் சொல்லி விட்டு, பாபா உங்களுக்கு நல்லதே செய்வார் என கூறிவிட்டு வந்தேன்.

சில நாட்கள் கழித்து அவரே போன் செய்து படப்பிடிப்பு தேதியையும், இடத்தையும் கேட்டார். சொன்னேன் அந்த தேதியில் அவரே காரை விட்டு இறங்கி நடந்து வந்து நடித்துக் கொடுத்தார். டப்பிங்கும் அவரே பேசினார். நடக்கவே முடியாதவர் பாபாவின் ஆசியால் நடித்தது அபூர்வம்தானே. அதுமட்டுமல்ல, நடித்ததற்காக பணம் எதுவுமே வாங்கவில்லை அவர். நிஜமாய் நடந்த அந்த சம்பவம் எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தித் தந்தது," என்றார்.

English summary
Aboorva Mahan is a new movie based on the life history of Shirdi Saibaba.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil