»   »  பாஸ்.. அடுத்த ஷாரூக்- கஜோல் யாரு தெரியுமா?

பாஸ்.. அடுத்த ஷாரூக்- கஜோல் யாரு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: திரையில் ஷாரூக்-கஜோல் போன்று அற்புதமான ஜோடியாக வருங்காலத்தில் அப்ராமும், ஆரத்யாவும் திகழ்வார்கள் என ஷாரூக் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் கோல்டன் ஜோடிகளாக இன்றளவும் கொண்டாடப்படுகிறார்கள் ஷாரூக்கும், கஜோலும். இவர்கள் சேர்ந்து நடித்த 6 திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் கெமிஸ்டிரியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

சுமார் 19 ஆண்டுகளாக, அதாவது 1000 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிய படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இப்படத்தில் சேர்ந்து நடித்த ஷாரூக்கும், கஜோலும் தற்போது தில்வாலே படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

தில்வாலே...

தில்வாலே...

கடந்த வாரம் ரிலீசான தில்வாலே தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. மீண்டும் ஷாரூக்-கஜோல் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

அடுத்த ஷாரூக்-கஜோல்...

அடுத்த ஷாரூக்-கஜோல்...

இந்நிலையில், பேட்டியொன்றில் திரையில் அடுத்த ஷாரூக்-கஜோல் ஜோடியாக ஜொலிக்கும் திறமை கொண்டவர்கள் யார் என ஷாரூக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ரன்வீர்-தீபிகா, ரன்பீர்-தீபிகா, சித்தார்த்-அலியா, பவாத்-சோனம் என சாய்ஸும் கொடுக்கப்பட்டது.

அப்ராம்-ஆரத்யா...

அப்ராம்-ஆரத்யா...

ஆனால், இந்தப் பட்டியலில் இல்லாத புதிய ஜோடி பெயரைத் தெரிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி விட்டார் ஷாரூக். ஆம், திரையில் அடுத்த ஷாரூக்-கஜோல் ஜோடியாக அப்ராம்-ஆரத்யா ஜோடி திகழும் என அவர் பதிலளித்தார்.

நட்சத்திர வாரிசு...

நட்சத்திர வாரிசு...

அப்ராம் ஷாரூக்கின் மூன்றாவது மகன் ஆவார். இதே போல், ஆரத்யா, ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனின் மகள் ஆவார்.

கஜோலின் மறுப்பு...

கஜோலின் மறுப்பு...

ஷாரூக்கின் இந்தப் பதிலைக் கேட்டு கஜோல், ‘அப்ராம் ஆரத்யாவை விட வயதில் சின்னவர் ஆயிற்றே. பிறகு எப்படி அவர்கள் சிறந்த ஜோடியாக திகழ முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அதனால் என்ன?

அதனால் என்ன?

அதற்கு ஷாரூக், "இருக்கட்டுமே, நான் உன்னை விட வயதில் சிறியவனாக இருந்திருந்தால், என்னுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்க மாட்டாயா என்ன.. ?" என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

ஷாருக்கானிடம் பேச ஜெயிக்க முடியுமா பாஸ்!

English summary
As per an article in Pink Villa, during one such promotional interview, when SRK and Kajol were asked which is the next best on-screen jodi in Bollywood out of Ranveer-Deepika, Ranbir-Deepika, Sidharth-Alia, Fawad-Sonam. Pat came the reply from Shah Rukh Khan, unexpectedly! He said, "AbRam and Aaradhya!"
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil