Absolute Nonsense...நாகர்ஜுனா திடீரென பொங்கி வெடிக்க இது தான் காரணமா ?

ஐதராபாத் : விவாகரத்திற்கு சமந்தா தான் காரணம் என நாகர்ஜுனா பேட்டி அளித்ததாக வெளியான தகவலால் டென்ஷனான நாகர்ஜுனா, ட்விட்டரில் கோபமாக வெடித்துள்ளார். இதனால் நாகர்ஜுனாவின் இந்த திடீர் கோபத்திற்கு என்ன காரணம் என பலரும் கேட்க துவங்கி விட்டனர்.

Recommended Video

Samantha-வின் முடிவு தான் Divorce? | Nagarjuna கொடுத்த பதில் | Sam Chay Separation | Filmibeat Tamil

தென்னிந்தியா சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் சமந்தாவும், நாகசைதன்யாவும். இவர்கள் பிரபலமான நட்சத்திர தம்பதியாகவும் இருந்தார்கள். பல மாதங்களாக விவாகரத்து வதந்தியில் சிக்கிய இவர்கள், கடந்த ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். பல மாதங்கள் ஆன பிறகும் தற்போது வரை அவர்களின் விவாகரத்து பற்றிய வதந்திகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மெளனம் காத்த நாகர்ஜுனா குடும்பம்

மெளனம் காத்த நாகர்ஜுனா குடும்பம்

சமந்தா - நாகசைதன்யா இருவரும் மனம் ஒத்து பிரிவதாக அறிவித்து விட்டனர். அதற்கு பிறகு இவர்களின் விவாகரத்து பற்றி சமந்தா தான் ஒரு சில இடங்களில் பதிலளித்து வந்தார். ஆனால் நாக சைதன்யாவோ, நாகர்ஜுனாவின் குடும்பத்தை சேர்ந்தவர்களோ யாரும் எந்த கருத்தும் சொல்லவில்லை. இவர்களின் விவாகரத்து முடிவு துரதிஷ்டவசமானது. இருந்தாலும் இது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று மட்டுமே நாகர்ஜுனா ட்விட்டரில் ரியாக்ட் செய்தார்.

நாக சைதன்யா சொன்ன சிம்பிள் பதில்

நாக சைதன்யா சொன்ன சிம்பிள் பதில்

சமீபத்தில் பங்காருராஜு படத்தின் ப்ரொமோஷனின் போது அளித்த பேட்டியில் தான் நாகசைதன்யா, விவாகரத்து இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான். அப்போது அது தான் சரியான தேர்வாக இருக்கும் என தோன்றியதால் அந்த முடிவை எடுத்தோம். இதில் அவருக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம் தான் என்றார். மேலும் திரையில் தனது பொருத்தமான ஜோடி சமந்தா தான் எனவும் தெரிவித்தார்.

இருவரும் இணைய போகிறார்களா

இருவரும் இணைய போகிறார்களா


இதற்கிடையில் சமந்தா தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து பிரிவு தொடர்பான போஸ்டை நீக்கினார். இதனால் அவர்கள் மீண்டும் இணைய போகிறார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தேவையில்லாத போஸ்ட்கள் நிறைய இருந்ததால் அதோடு சேர்த்து இதையும் நீக்கியதாக சமந்தா தனது பேட்டியில் விளக்கமும் அளித்தார்.

சமந்தா காரணமா

சமந்தா காரணமா

இந்நிலையில், சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விஷயத்தில் சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டுள்ளார். தொடர்ந்து சமந்தா அதில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழி இல்லாத காரணத்தால் தான் நாகசைதன்யாவும் விவாகரத்திற்கு ஒப்புக் கொண்டதாகவும் நாகசைதன்யாவின் தந்தையும் பிரபல நடிகருமான நாகர்ஜுனா கூறியதாக மீடியாக்களில் செய்தி பரவியது. இதை பார்த்து கடுப்பான நாகர்ஜுனா முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நான் எந்த பேட்டியும் தரவில்லை

நான் எந்த பேட்டியும் தரவில்லை

ட்விட்டரில் அவர் தனது பதிவில், சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து விஷயம் தொடர்பாக நான் கூறியதாக சோஷியல் மீடியாக்களிலும், சில டிஜிட்டல் மீடியாக்களிலும் வெளியான தகவல் பொய்யானது. நான்சென்ஸ். தயவு செய்து வதந்திகளை செய்திகளாக பதிவிட வேண்டாம் என ஊடக நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். Give news not rumours என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தி உள்ளார் நாகர்ஜுனா.

காரணம் இது தானா

காரணம் இது தானா

சமந்தா - நாகசைதன்யா விவகாரத்தில் இதுவரை பல வதந்திகள் வந்த போதும் மெளனம் காத்த நாகர்ஜுனா கோபப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறதாம். விவாகரத்தை அறிவித்த போதே சமந்தா விவாகரத்திற்கு சமந்தா தான் காரணம் என்பது போல் பல வதந்திகள் பரவின. தற்போது நாகர்ஜுனா சொன்னதாக வெளியான தகவலால் பலர் சமந்தா பற்றி மிக கடுமையாக விமர்சிக்க துவங்கி விட்டனர். சமந்தா மீது மேலும் மேலும் அவப்பெயர்கள் வருவதை விரும்பாமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் நாகர்ஜுனா இப்படி ஒரு கோபமான பதிவை பகிர்ந்தாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X