»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமேசுவரம்:

"நந்தா" படப்பிடிப்புக்காகச் சென்ற வேன் கவிழ்ந்து 12 துணை நடிகர்-நடிகைகள் காயம் அடைந்தனர்.

இலங்கை அகதிகள் பற்றிய கதைதான் "நந்தா". இதனால் இலங்கை அகதிகள் வந்து சேரும்ராமேசுவரம் பகுதியில் கடந்த 10 நாட்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ராமேசுவரம் அருகே அரிச்சமுனையில் இலங்கை அகதிகள் வந்து இறங்குவது போல ஒரு காட்சிபடமாக்கப்பட்டது. அது முடிந்தவுடன் படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் ஒரு வேனில்ராமேசுவரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வேன் கவிழ்ந்ததில் துணை நடிகர்-நடிகைகள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.

துணை நடிகர் செல்வத்துக்குத் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. துணை நடிகை நந்தினிக்குக் கைமுறிந்தது. இவர்கள் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மற்றவர்கள் அனைவரும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil