»   »  பிரபல டிவி சீரியல் இயக்குனர் வழுக்கி விழுந்து மரணம்

பிரபல டிவி சீரியல் இயக்குனர் வழுக்கி விழுந்து மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல இந்தி தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய வாசிம் சபீர் மரணம் அடைந்தார்.

வீரா, கங்கா, தமன்னா, இஸ் பியார் கோ கியா நாம் தூன்..ஏக் பார் ஃபிர்? ஆகிய இந்தி தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர் வாசிம் சபீர். அவர் புத்தாண்டு அன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டது.

Acclaimed TV shows director Waseem Sabir passed away

உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் அடிபட்ட அவருக்கு மூளையில் சேதம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். சபீரின் மரணத்தால் இந்தி தொலைக்காட்சி தொடர் கலைஞர்கள், இயக்குனர்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Acclaimed TV shows director Waseem Sabir passed away

புத்தாண்டே இப்படியா துவங்க வேண்டும் என்று இந்தி சின்னத் திரை உலகம் கவலை அடைந்துள்ளது.

English summary
Acclaimed TV shows director Waseem Sabeer succumbed to brain injuries after he tripped in his home and hurt his head on new year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil