»   »  அச்சம் என்பது மடமையடா - நவம்பரில் திரைக்கு வரும் சிம்பு

அச்சம் என்பது மடமையடா - நவம்பரில் திரைக்கு வரும் சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் ஹிட்டிற்குப் பின் சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘அச்சம் என்பது மடமையடா'.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கவிஞர் தாமரை பாடல்களை எழுதியிருக்கிறார். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படம் சிம்புவின் வாலு கொடுத்த தெம்பில் தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.

அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

Achcham Enbadhu Madamaiyada Release Details

டீசரைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தை போன்று இப்படம் உருவாகியுள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த டீசரில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்து இருக்கின்ற நிலையில், படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றது என்ற தகவல் ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.

அதில் ஒரு பாடலான ‘அவளும் நானும், அமுதும் தமிழும்' என்ற பாடல் அழகான வரிகளில் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் உருவாகியிருக்கிறது. டீசரில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடலை கேட்பதற்கே ரொம்பவும் இனிமையாக உள்ளது. எனவே ஒருமுறை டீசரை பார்த்தவர்கள் தற்போது மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சிம்புவை வைத்து இது நம்ம ஆளு படத்தை எடுத்து வரும் இயக்குநர் பாண்டிராஜ் படத்தின் டீசர் நன்றாக நன்றாக இருக்கிறது, என்று இயக்குநர் கவுதம் மேனனையும் நாயகன் சிம்புவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி இருக்கிறார்.

படத்தில் பின்னணி இசை மற்றும் ஆக்க்ஷன் காட்சிகளில் இசையின் பங்கு மிகவும் அதிகம் இருப்பதால், அதற்குத் தகுந்தவாறு இசையை அளித்திருக்கிறாராம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

விரைவில் பாடல்களை வெளியிடத் திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், படத்தை நவம்பரில் திரைக்கு வர கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனராம்.

நவம்பர் மாதம் என்றால் தீபாவளி வெளியீடா, அல்லது அஜீத்தின் படத்திற்காக தள்ளி வெளியிடுகிறார்களா என்பது தெரியவில்லை பார்க்கலாம்....

English summary
Simbu's Achcham Enbadhu Madamaiyada Movie, Released in November Month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil