»   »  கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் ‘அச்சம் என்பது மடமையடா’!

கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் ‘அச்சம் என்பது மடமையடா’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு அச்சம் என்பது மடமையடா எனப் பெயரிடப் பட்டுள்ளது.

மின்னலே, வாரணம் ஆயிரம், பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் கௌதம்மேனன்.

பொதுவாக தனது படத்திற்கு பிரபல பாடல் வரிகளைத் தலைப்பக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கௌதம்.

என்னை அறிந்தால்...

என்னை அறிந்தால்...

அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தலைப்புக் கூட, எம்ஜிஆரின் உன்னை அறிந்தால் பாடலின் சாயலில் வைக்கப்பட்டது தான்.

சிம்புவை வைத்து

சிம்புவை வைத்து

இந்நிலையில், என்னை அறிந்தால் வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த பட வேலைகளைத் துவக்கி விட்டார் கௌதம். இப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார்.

சட்டென்று மாறுது வானிலை...

சட்டென்று மாறுது வானிலை...

ஏற்கனவே சிம்புவை வைத்து விண்ணைத் தாண்டி வருவாயா என்ற வெற்றிப் படத்தைத் தந்த கௌதம், இப்படத்திற்கு முதலில் ‘சட்டென்று மாறுது வானிலை' எனப் பெயர் வைத்திருப்பதாகக் கூறப்பட்டது.

சூர்யா பட பாடல் வரியில்...

சூர்யா பட பாடல் வரியில்...

இந்தத் தலைப்பு வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா பாடும் பாடலின் ஒரு வரி ஆகும்.

வேறு தலைப்பு...

வேறு தலைப்பு...

ஆனால் அதனை ஏற்கனவே ஒருவர் பதிவு செய்திருந்ததால், அந்த தலைப்பை கைவிட்டார் கௌதம். எனவே வேறு பெயரை பரிசீலனை செய்து வந்தார்.

அச்சம் என்பது மடமையடா....

அச்சம் என்பது மடமையடா....

இந்நிலையில், தற்போது ‘அச்சம் என்பது மடமையடா' என சிம்பு படத்தின் பெயரை உறுதி செய்திருக்கிறார் கௌதம். இதுவும் எம்ஜிஆர் பாடல் வரிதான்.

கதைக்கு தகுந்த தலைப்பு...

கதைக்கு தகுந்த தலைப்பு...

கதைக்கு தகுந்தபடி இருப்பதால், இத்தலைப்பை தேர்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார் கௌதம். இப்படம் காதல் கலந்த ஆக்‌ஷன் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை ஏ.ஆர்.ரஹ்மான்...

இசை ஏ.ஆர்.ரஹ்மான்...

இம்மாத தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு ஜோடியாக பல்லவி நடிக்கிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

English summary
Finally, we have the title for Gautham's film with Simbu - Achcham Yenbathu Madamaiyada. The title reinforces Gautham's fascination with Tamil titles of late.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil