twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செம்மலர் அன்னம் நடித்த குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.. 59 விருதுகளுக்கு மேல் பெற்று சாதனை!

    |

    சென்னை: தாய்க்கும், மகனுக்குமான பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ள 'சஷ்தி' குறும்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    Recommended Video

    Semmalar Annam | முதல் விளம்பரம் நடித்த அனுபவம் | Filmibeat Tamil

    Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் 'சஷ்தி'. ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

    30 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் ரிலீசாகி உள்ளது.

    பொன்னியின் செல்வன் தெலுங்கு வெர்ஷன்ல சிரஞ்சீவியா?: அதனாலதான் சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னாரா மணிரத்னம்பொன்னியின் செல்வன் தெலுங்கு வெர்ஷன்ல சிரஞ்சீவியா?: அதனாலதான் சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னாரா மணிரத்னம்

    வளர்ப்பு மகன்

    வளர்ப்பு மகன்

    தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த 'சஷ்தி' குறும்படம், தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனுடைய கருத்துக்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது .

    லைவ் ஆடியோ ரெக்கார்டிங்

    லைவ் ஆடியோ ரெக்கார்டிங்

    இந்த படம் லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ளது தனிச்சிறப்பு. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த 'சஷ்தி' குறும்படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை , 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது.

    கதாபாத்திரம் தான் முக்கியம்

    கதாபாத்திரம் தான் முக்கியம்

    அம்மணி, சில்லு கருப்பட்டி, பொன்மகள் வந்தாள் போன்ற பல படங்களில் நடித்த செம்மலர் அன்னம் இந்த குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நல்ல கதாபாத்திரம் தான் வெற்றிக்கு முக்கியமே தீவிர, நடிப்பதற்கு நிறமோ, அழகும் முக்கியமில்லை என்று தற்போது இருக்கும் சில நடிகைகள் நிரூபித்து வருகின்றனர். அதில் நடிகை செம்மலர் அண்ணமும் ஒருவர் .

    ஒரு வருஷம் ஆயிடுச்சி

    ஒரு வருஷம் ஆயிடுச்சி

    இதே போல் சரண்யா ரவிச்சந்திரன், கேப்ரில்லா போன்ற பலரும் சினிமா திரையில் சாதித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. நடிகை செம்மலர் அன்னத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் விதமாக இந்த குறும்படத்தில் பல விருதுகளும் பெற்றுள்ளது. "30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே ஓடக்கூடிய இந்த குறும்படத்தை ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டாலும், இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது" என்கிறார் ஜூட் பீட்டர் டேமியான்.

    English summary
    Acknowledgment for the short film starring Semmalar Annam, A record of more than 59 awards
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X