twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைக்கு ஏது மொழி? ... அஜய்தேவ்கான்கள் திருந்துவார்களா?

    |

    மக்களை சந்தோஷபடுத்தும் கலைக்கு மொழி ஒரு இடையூறான ஒன்றே அல்ல, நல்ல கலையம்சமுள்ள படைப்புகள் மொழி கடந்து ரசிக்கப்படும். இதை அஜய் தேவ்கான் போன்றோர் அறியவில்லை.

    சென்னை: நல்ல படைப்புக்கும், நல்ல இசைக்கும் எப்போதும் வரவேற்பு உண்டு. அதனால் தான் மொழி, நாடு, இனம், மதம் கடந்து நல்ல கலைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது காலங்காலமாக உள்ள உண்மை. இதை அறியாமல் அவ்வப்போது எழும் பிரச்சினைகள் அடிப்படையில் இதை அணுகிய அஜய் தேவ்கான் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு பின்வாங்கியுள்ளார்.

    ரிலீசுக்கு தயாராகும் வெந்து தணிந்தது காடு படம்... அடுத்த அப்டேட் இதோ! ரிலீசுக்கு தயாராகும் வெந்து தணிந்தது காடு படம்... அடுத்த அப்டேட் இதோ!

    சிறந்த படைப்புகளை மொழி கடந்து ஏற்கும் மக்கள்

    சிறந்த படைப்புகளை மொழி கடந்து ஏற்கும் மக்கள்

    இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. பல்வேறு, மொழி கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழும் நாடு. அவரவர் மொழி பண்பாடு, கலாச்சாரத்தை மதித்து வாழும் நாடு. இதனால் இந்தியா ஒற்றுமையுடன் உள்ளது. இங்கு பல்வேறு மொழிகளில் சிறப்பான படைப்புகள் உருவாகியுள்ளன. சிறந்த படைப்புகள் வேற்று மொழியில் இருந்தாலும் அது மாற்று மொழி மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதுதான் சிறப்பு.

    மொழிகடந்து ஆதிக்கம் செலுத்திய சினிமா

    மொழிகடந்து ஆதிக்கம் செலுத்திய சினிமா

    காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சியில் சினிமா தோன்றியபோது அது பேசும்படமாக மாறியபோது இசையும் பாடல்களும் உருவானது. அதுவரை இருந்த நிலையைவிட பெரும் வீச்சு திரையுலகில் நிகழ்ந்தது. பல மாநிலங்களில் இனிமையான இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் வந்தனர். உலகில் ஆங்கில மொழியில் பல அற்புதமான படைப்புகள் வெளியாகின. இதை மொழி நாடு கடந்து மக்கள் நேசித்தனர்.

    இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட இந்தி பட உலகின் படைப்பாளிகள்

    இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட இந்தி பட உலகின் படைப்பாளிகள்

    இந்தியாவில் பெருவாரியான மக்கள் பேசும் இந்தி மொழியில் உருவான பாலிவுட் உலகம் அற்புதமான படைப்பாளிகள் வந்தனர். நிகரற்ற படைப்புகளை தந்தனர். அவைகளை பல்வேறு மாநிலங்களில் மொழி கடந்த மக்கள் ஏற்று அங்கிகரித்தனர். மொழி புரியாவிட்டாலும் இசைக்கு மொழி இல்லாததால் இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர், முகேஷ், மன்னாதேவ், முகமதுரஃபி, கிஷோர் குமார் குரல் அனைத்து இந்திய மக்களாலும் ரசிக்கப்பட்டது.

    அற்புதமான கலைஞர்களை அளித்த தென் இந்திய திரையுலகம்

    அற்புதமான கலைஞர்களை அளித்த தென் இந்திய திரையுலகம்

    அதேப்போன்று மாநில மொழிகளில் தென் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அற்புதமாக இந்தியாவே மதிக்கும் கலைஞர்கள் படைப்பாளிகள் உருவாகினர். வங்கத்தில் சத்யஜித்ரே, மிருணாள் சென் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டுச் சென்றனர்.

    சிவாஜி எனும் மகா கலைஞன், அரசியலை ஆண்ட கலையுலக நாயகர்கள்

    சிவாஜி எனும் மகா கலைஞன், அரசியலை ஆண்ட கலையுலக நாயகர்கள்

    சிவாஜி கணேசன் எனும் கலைஞன் மொழி நாடு கடந்து உலக நாடுகளிலும் மதிக்கப்பட்டார். ராஜ்கபூர், நர்கீஸ் நடித்த படங்கள் சோவியத் யூனியன், ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது. எம்ஜிஆர், என்.டி.ஆர் நாடாளும் முதல்வராகினர். ஜெயலலிதா இந்திய அளவில் ஆளுமைமிக்க முதல்வராக இருந்தார். தனது படைப்பாற்றலால் கூர்மிகு வசனங்களால் போற்றப்பட்டார் கருணாநிதி.

    பாலிவுட்டில் கால்பதித்த தென் இந்திய கலைஞர்கள்

    பாலிவுட்டில் கால்பதித்த தென் இந்திய கலைஞர்கள்

    பாலிவுட் உலகின் கபூர் குடும்பம், அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சுனில்தத், சத்ருகன் சின்ஹா, ஜெயாபச்சன், தென் இந்தியாவிலிருந்து பாலிவுட் சென்ற ஹேமாமாலினி, ஜெயப்பிரதா போன்றோர் அரசியலிலும் கால் பதித்துள்ளனர். தென் இந்தியாவிலிருந்து சென்ற கமல், ரஜினி, சிரஞ்சீவி, ஹேமாமாலினி, ரேகா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் அங்கும் முத்திரைபதித்தனர். இதுதான் இந்தியா.

    மொழியைக்கடந்த ஜாம்பவான் கலைஞர்கள்

    மொழியைக்கடந்த ஜாம்பவான் கலைஞர்கள்

    கமல்ஹாசன் எனும் தென் இந்திய, தமிழ் பட கலைஞர் பாலிவுட் தாண்டி உலக தரத்திற்கு சினிமாவை கொண்டுச் சென்றார், அவரது ஹே ராம் பான் இந்தியா படைப்பாக பாராட்டப்பட்டது. புஷ்பக் படமும் அவ்வாறே புதிய படைப்பாக இருந்தது. தென் இந்தியாவிலிருந்து சென்ற ராம்கோபால்வர்மா, மணிரத்னம், ஷங்கர் போன்றோரை பாலிவுட் உலகம் ஏற்றுள்ளது. வட இந்திய இசையமைப்பாளர்கள் தமிழிலும் இசையமைத்துள்ளனர். எஸ்.பி.பி, ஜானகி போன்ற பாடகர்களுக்கு மொழி ஏது? இதுதான் இந்தியா. மொழி கலைக்கு தடையாக இருந்ததில்லை.

    வேற்றுமை பாராட்டாத திரையுலகினர்

    வேற்றுமை பாராட்டாத திரையுலகினர்

    திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்களும், படைப்பாளிகளும் அதை பெரிதாக வேற்றுமை பாராட்டியதில்லை. ரசிகர்களும் அப்படி பார்த்ததில்லை. பார்த்திருந்தால் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் வந்திருக்கவே முடியாது. தமிழில் நடிக்கும் நடிகைகள் ஒருவர் கூட இங்கு கால் பதிக்க முடியாது. ஆனால் சமீப காலமாக அரசியலில் எழும் இப்பிரச்சினை கலைஞர்களையும் பாதித்துள்ளதே அஜய்தேவ்கான் போன்றோரின் மாற்றம் எனலாம்.

    மொழி கற்பது அவசியம், திணிப்பது அனாவசியம்

    மொழி கற்பது அவசியம், திணிப்பது அனாவசியம்

    இந்தி மட்டுமல்ல தேவைப்படின் அனைத்து மொழிகளையும் கற்கலாம், கற்பதில் தவறேதும் இல்லை, கற்பது அவரவர் விருப்பம். மொழி எப்போதும் மனிதர்களை உணர்வால் இணைக்கும் ஒன்றாகும். இதுதான் மொழி குறித்த அனைவரின் நிலைப்பாடு. மொழியை விரும்பிப்படிப்பதும், அதை திணித்து படிக்க வைப்பதற்கும் வித்யாசம் உண்டு. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக இந்தி பேசாத மாநில மக்களின் எண்ணம் இதுதான். தேவை ஏற்பட்டால் நாங்கள் இந்தி என்ன, ஜெர்மனி மொழியைக்கூட கற்றுக்கொள்கிறோம், தேவை இல்லாமல் வலுக்கட்டாயமாக திணிக்காதீர்கள் என்பதே அனைவரின் நிலைப்பாடு.

    மீண்டும் புதிதாக எழும் அரசியல் சர்ச்சை

    மீண்டும் புதிதாக எழும் அரசியல் சர்ச்சை

    மொழித்திணிப்பின் அடுத்தக்கட்டமாக இந்தி மொழி தேசிய மொழி என்று பதிவு செய்யும் முயற்சி சில அரசியல் தலைவர்களால் பதிய வைக்கப்படுகிறது. அதிகமான மக்கள் பேசுவதால் இந்தியா போன்ற பல மொழிகளால் இணைந்த யூனியன் கவர்ன்மெண்டில் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திணிக்க முடியாது என்பது இதுகுறித்து அறிந்தவர்கள் வாதம்.

    மொழி குறித்த அறியாமையால் சிக்கி சின்னாபின்னமான அஜய்தேவ்கான்

    மொழி குறித்த அறியாமையால் சிக்கி சின்னாபின்னமான அஜய்தேவ்கான்

    இந்த எண்ணம் தற்போது கலைத்துறையினருக்கும் ஆபத்தான நோயாக பரவியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதன் வெளிப்பாடே அஜய்தேவ்கான் போன்ற நடிகர்களின் வெளிப்பாடு ஆகும். சினிமாத்துறை தற்போதைய நவீன தொழிற்நுட்ப வளர்ச்சியால் உலக அளவிலான மார்க்கெட்டை நோக்கி செல்கிறது. நடிகர் ரஜினிகாந்த், அஜித் போன்ற தென் இந்திய கலைஞர்கள் படம் ஓவர்சீஸ் ரிலீஸ் செய்யப்படுகிறது.

    உலக அளவில் கால் பதிக்கும் இந்திய திரையுலகினர்

    உலக அளவில் கால் பதிக்கும் இந்திய திரையுலகினர்

    தென் இந்திய நடிகர்கள், இயக்குநர்களின் கலையுலக அப்டேட் காரணமாக உலக அளவிலான படங்கள் எடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. ராம்கோபால்வர்மா, ஷங்கர், ராஜமவுலி, நீல் போன்றோர் எடுத்த படங்கள் உலக அளவில் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. ராஜமவுலியின் பாகுபலி இரண்டு பாகங்களும், ஆர்.ஆர்.ஆர் படமும், ஷங்கரின் எந்திரன், 2.0 போன்ற படங்களும், நீல் இயக்கத்தில் கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படமும் பெரும் வரவேற்பை இந்திய அளவில் பெற்று பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்துள்ளது.

    திரையுலகின் புதிய முன்னேற்றம் பான் இந்தியா

    திரையுலகின் புதிய முன்னேற்றம் பான் இந்தியா

    சமீப காலமாக பான் இந்தியா எனும் வகைப்படங்கள் வெள்வருவதன் மூலம் மொழி கடந்து அனைத்து மொழிக்கலைஞர்களும் ஒரு படத்தில் இணைவது, அந்தந்த மாநில மொழிகளில் படம் டப் செய்யப்படுவது என்பதன் மூலம் புதிய வகையில் திரைத்துறை பெரும் லாபத்தை பார்த்துவருகிறது. அதில் சமீபத்திய வரவான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், பீஸ்ட், கேஜிஎஃப்-2 ஆகிய படங்கள் சிறந்த உதாரணம்.

    கலைத்துறையில் ஏன் திடீரென மொழி திணிப்பு

    கலைத்துறையில் ஏன் திடீரென மொழி திணிப்பு

    ஆகவே மொழி எங்குமே கலைத்துறையில் ஒரு பேசுபொருளாக இல்லாத போது, மொழியை முன் வைத்து இந்தி மொழிதான் முக்கியம், இந்தி தேசிய மொழி, இந்தி வேண்டாம் என்றால் கன்னடப்படத்தை ஏன் இந்தியில் வெளியிட வருகிறீர்கள் என்று அஜய் தேவ்கான் கிச்சாசுதீப்பை பார்த்து கேட்டது அவரது அறியாமையை வெளிப்படுத்தியது, திரைத்துறையின் வியாபாரத்தின் அடிப்படியில் கைவைப்பதாக அமைந்தது.

    இந்தி இந்திய ஆட்சி மொழியா? நெட்டிசன்களிடம் சிக்கிய அஜய்தேவ்கான்

    இந்தி இந்திய ஆட்சி மொழியா? நெட்டிசன்களிடம் சிக்கிய அஜய்தேவ்கான்

    இத்தனைக்கும் அஜய் தேவ்கான், ஆர்.ஆர்.ஆர் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார், தமிழில் வந்த சிங்கம் படத்தின் இந்தி ரீ மேக்கில் நடித்துள்லார், மலையாளத்தில் வெற்றிப்படைப்பாக வந்த திரிஷ்யத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் தத் போன்ற பெரிய நடிகர் கேஜிஎஃப் படத்தின் முக்கிய வில்லனாக நடித்து பாராட்டப்பட்டு வருகிறார்.

    வறுத்தெடுத்த நெட்டிசன்கள், பொறுப்பாக பதில் சொன்ன கிச்சா

    வறுத்தெடுத்த நெட்டிசன்கள், பொறுப்பாக பதில் சொன்ன கிச்சா

    இந்த அடிப்படை உண்மைகளை அறியாமல் பதிவிட்ட அஜய்தேவகானுக்கு மிகுந்த பொறுப்புடன் பதிலளித்தார் கிச்சா சுதீப், அத்துடன் என் பதிவை நான் கன்னடத்தில் பதிவிட்டால் என்ன ஆகும் யோசியுங்கள் என்றும் பதிவிட்டார். நெட்டிசன்கள் அஜய் தேவ்கானின் குறுகிய பார்வையௌம், இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை அறியாத அவரது அறியாமையையும் வைத்து பெரிதாக விமர்சித்தனர்.

    அஜய்தேவ்கான் தொடங்கி வைத்த வாதம், வெடிக்கும் விவாதம்

    அஜய்தேவ்கான் தொடங்கி வைத்த வாதம், வெடிக்கும் விவாதம்

    இதனால் உண்மை நிலை அறிந்த அஜய் தேவ் கான் அந்தர் பல்டி அடித்து தான் அவ்வாறு நினைக்கவில்லை மொழிப்பெயர்ப்பில் வந்த தவறு என பதிவிட்டு நழுவினார், படுத்தே விட்டானய்யா என்பதுபோல் பின்வாங்கினார். ஆனாலும் அவர் தொடங்கிவைத்த விவாதத்துக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பதிலளித்துள்ளார். பலரும் பதிலளித்து வருகின்றனர். கலை அனைத்தையும் கடந்தது என நெட்டிசன்கள் சரியாகவே அஜய்தேவ்கானுக்கு பாடம் நடத்தியுள்ளனர்.

    English summary
    Language is not the only obstacle to the art of entertaining people, if the movie is too good then it will be liked by people other than language. Persons Like Ajay Devgan not understood this, and posted some controversial comments on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X