தனுஷ் படத்தில் நடித்தது எனக்கு மன உளைச்சலை கொடுத்தது... நடிகர் போஸ் வெங்கட் வேதனை
தனுஷ் படத்தில் நடித்தது எனக்கு மன உளைச்சலை கொடுத்தது... நடிகர் போஸ் வெங்கட் வேதனை
நானே வருவேன் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் கேப்டன் மிலர் திரைப்படத்தின் பூஜையும் சமீபத்தில் தான் நடைபெற்றது.

மாறன்
வட சென்னை, அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும், இடையிடையே சில தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார் தனுஷ். அந்த வகையில் கர்ணன் திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம், ஆத்ராங்கி ரே மற்றும் மாறன் ஆகிய மூன்று திரைப்படங்களும் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

கார்த்திக் நரேன்
துருவங்கள் 16 திரைப்படத்தின் மூலம் சினிமா துறை மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இளம் வயதிலேயே அப்படிப்பட்ட ஒரு கதையை திரைப்படமாக மாற்றி அனைவரையும் பிரமிக்கச் செய்தார். ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கத்தில் வெளிவந்த மாஃபியா திரைப்படம் கடும் தோல்வியை சந்தித்தது. மூன்றாவதாக அவர் இயக்கிய படம்தான் மாறன். தனுஷுடன் முதன் முறையாக கூட்டணி அமைத்ததால் மாறன் திரைப்படத்திற்கு ரிலீஸிற்கு முன்பு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தப் படமும் தோல்வியை சந்தித்தது.

போஸ் வெங்கட்
அந்தப் படத்தில் சமுத்திரகனி ஒரு அரசியல்வாதியாக நடித்திருப்பார். அவருக்கு அசிஸ்டண்ட்டாக நடிகர் போஸ் வெங்கட் நடித்திருப்பார். இந்தப் படத்தில் நடித்தது குறித்து தன்னுடைய வருத்தத்தை ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். நடிகர் தனுஷ் மீது தனக்கு எந்த விதமான வருத்தமும் கிடையாது. ஆனால் மாறன் போன்ற திரைப்படங்களில் நடிப்பதற்கு நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்ற வருத்தம் இருக்கிறது. நல்ல தயாரிப்பு நிறுவனம், நிறைய நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் படம் பார்த்த பிறகு என் மனைவி என்னை கட்டிப்பிடித்து அழுதார்.

சோனியா வெங்கட்
போஸ் வெங்கட் அவர்களின் மனைவியும் நடிகையுமான சோனியா அவர்கள் மாறன் திரைப்படத்தை பார்த்துவிட்டு,"2006-ஆம் ஆண்டு சிவாஜி படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடித்தீர்களோ அதே கதாபாத்திரத்தில் 16 ஆண்டுகள் கழித்து மாறன் திரைப்படத்திலும் நடித்துள்ளீர்கள். ஒன்று நீங்கள் வளராமல் அதே நிலையில் இருக்குறீர்கள், இல்லையென்றால் உங்களுக்கு பக்குவம் வரவில்லை, அல்லது அவசரப்பட்டு கதையை கேட்காமல் நடித்திருக்க வேண்டும் என்று தன்னிடம் கூறி வருத்தப்பட்டதாக போஸ் வெங்கட் தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











