»   »  ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் சாதனை! - சமுத்திரக்கனி பெருமிதம்

ரஜினியுடன் நடித்தது வாழ்நாள் சாதனை! - சமுத்திரக்கனி பெருமிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தது வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன் என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

கபாலி படத்துக்குப் பிறகு ரஜினியை வைத்து பா ரஞ்சித் இயக்கி வரும் படம் காலா. இந்தப் படத்தில் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Acting with Rajini is my lifetime achievement - Samuthirakkani

முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் வரும் 12-ம் தேதி தொடங்கவிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்தது குறித்து சமுத்திரக்கனி அளித்துள்ள பேட்டியில், "என் இளம் வயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதர்ஸ நாயகன். அவரது படங்களை திரையரங்குகளில் விழுந்தடித்துப் பார்த்த பரம ரசிகன் நான்.

Acting with Rajini is my lifetime achievement - Samuthirakkani
Rajinikanth next film starts soon

இன்று அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருடன் முதல் ஷாட் முடிந்த உடனே மிகப் பெருமையாக உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை இது சாதனை அல்ல.. வாழ்நாள் சாதனை என்பேன்," என்றார்.

English summary
Director and actor Samuthirakkani is feeling proud and life time achievement to be a part in Superstar Rajinikanth's Kaala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil