ஃபைட்டர் ஜெட்.. கையில் ஏகே 47, பீஸ்ட் டிரைலர் இப்படித் தான் இருக்கும் என சொன்ன சன் பிக்சர்ஸ்!

சென்னை: பீஸ்ட் படத்தின் டிரைலரையும் நாளைக்கு இதே போல ஷார்ப்பா 6 மணிக்கு வெளியிட்டால் ரசிகர்கள் நிச்சயமாக சன் பிக்சர்ஸை கொண்டாடுவர்கள்.

ஏப்ரல் 2ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காமெடியாக இருக்குமா? அல்லது பீஸ்ட் மோடில் இருக்குமா? என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ள நிலையில்,, டிரைலர் இப்படித் தான் இருக்கும் என தற்போது சன் பிக்சர்ஸ் மாஸ் ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறது.

ஜெட் பிளைட், ஏகே 47, மோட்டார் பைக் என நடிகர் விஜய் இந்த போஸ்டரில் பீஸ்ட் மோடுக்கு மாறி உள்ளார்.

பீஸ்ட் டிரைலர்

பீஸ்ட் டிரைலர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபைட்டர் ஜெட்

ஃபைட்டர் ஜெட்

பீஸ்ட் டிரைலர் அறிவிப்பின் போதே விஜய் மாஸ்க் உடன் இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஃபைட்டர் ஜெட் ஓட்டுகிறார் என்பதை கணித்தனர். இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டரில் ஃபைட்டர் ஜெட்டை பெரிதாகவே போட்டிருக்கின்றனர். ஃபிளாஷ்பேக்கில் நடிகர் விஜய் ஃபைட்டர் ஜெட் ஓட்டியவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காட்சிகளை படமாக்கத்தான் இயக்குநர் ஜார்ஜியா சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கையில் ஏகே 47

கையில் ஏகே 47

பீஸ்ட் என டைட்டில் வைத்து விட்டு காமெடி பீஸாக படத்தை இயக்கி இருக்க மாட்டார் இயக்குநர் நெல்சன் என விஜய் ரசிகர்கள் முழுவதுமாக நம்பி வருகின்றனர். காமெடி பிளஸ் ஆக்‌ஷன் கலந்த படமாக பீஸ்ட் இருக்கும் என்பது அவர் கையில் உள்ள ஏகே 47 கன்னே சொல்கிறது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஆக்‌ஷன் பேக்டு டிரைலர்

ஆக்‌ஷன் பேக்டு டிரைலர்

மேலும், சன் பிக்சர்ஸும் ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணிக்கு வரவுள்ள பீஸ்ட் டிரைலர் ஆக்‌ஷன் பேக்டு டிரைலர் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். பீஸ்ட் படத்தில் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும் நிறைய ஆச்சர்யமான விஷயங்களை நெல்சன் வைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெல்மெட் போட்டிருக்கலாம்

ஹெல்மெட் போட்டிருக்கலாம்

சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய போஸ்டரில் நடிகர் விஜய் பைக்கில் ஹெல்மெட் போடாமல் இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் சிலர், நடிகர் விஜய் ஹெல்மெட் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் என்றும் தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து இருக்கலாம் என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். ஆனால், எந்த சூழலில் அவர் அப்படி பேக்கை மாட்டிக் கொண்டு பைக் ஓட்டி வருகிறார் என்பது படத்தை பார்த்தால் தான் தெரிய வரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X