»   »  நாளை நடிகர் சங்கம் கூடுகிறது

நாளை நடிகர் சங்கம் கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நாளை கூடுகிறது.

சரத்குமார் தலைமையில் செயல்பட்டு வரும் நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அவ்வப்போது நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கூட்டப்படும்.

அந்த வகையில் நாளை நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டப்பட்டுள்ளது. தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

சரத்குமார் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். தமிழக அரசு தியேட்டர்களின் டிக்கெட் கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது. இதனால் நடிகர்களும் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து செயற்குழு உறுப்பினர்களின் கருத்து கேட்டறியப்படும். மேலும் நடிகர் சங்க வளாகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடப் பணிகள், சங்க வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil