»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நகைச்சுவை நடிகர் கிங்காங், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தன்னை விட உயரமானஉறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

வடபழனி முருகன் கோவிலில் இந்தத் திருமணம் நடந்தது. பாண்டியராஜனின் ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் என்றபடத்தில் அறிமுகமானவர் கிங்காங். பல படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் தவிர தொலைக்காட்சித் தொடர்களிலும் கூட நடித்துள்ளார். 3 அடி உயரமே கொண்ட இவருக்கும்இவரது உறவுக்காரப் பெண் கலாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கலா திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்.

இருவரது திருமணம் வடபழனி முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடந்தது. மந்திரம்ஓத, வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும், பெற்றோர்கள் காலில் மணமக்கள் விழுந்துஆசிர்வாதம் பெற்றனர். பின்னர், தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன்காலில் விழுந்து கிங்காங் ஆசி பெற்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil