Don't Miss!
- News
செங்கோட்டையனா?.. "கமலாலய கசப்பு".. இதெல்லாம் யார் கேட்டது.. ஒரே நாளில் 2 ரியாக்ஷன்.. கவனித்த பாஜக
- Lifestyle
உங்கள் தலைமுடிக்கு புரோட்டீன் உடனே தேவை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரகசிய நிச்சயதார்த்தம் செய்த பிரபல ஜோடி... விரைவில் மேளச்சத்தம்!
ஐதராபாத் : யாகாவாராயினும் நா காக்க மற்றும் மரகதநாணயம் போன்ற படங்களில் நடித்த ஜோடி ஆதி பினிஷெட்டி மற்றும் நிக்கி கல்ராணி. இந்த ஜோடி இந்தப் படங்களில் நடித்தபோது காதல் வயப்பட்டதாக தொடர்ந்து கூறப்பட்ட நிலையில், அவர்கள் இதை ஒப்புக் கொள்ளவும் இல்லை மறுக்கவும் இல்லை.

ஆதி -நிக்கி கல்ராணி ஜோடி
நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகின்றனர். தமிழில் இவர்கள் தொடர்ந்து தனித்தனியாக படங்களில் நடித்துவந்த நிலையில், யாகாவாராயினும் நா காக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

ஆதி -நிக்கி காதல்
இந்த இரு படங்களும் இவர்களுக்கு சிறப்பாக அமைந்தன. சொந்த வாழ்க்கையிலும் இந்தப் படங்கள் இவர்களுக்கு முக்கியமாக அமைந்துள்ளன. இந்தப் படங்களில் நடிக்கும்போது தான் இவர்கள் காதலில் விழுந்தனர். இந்தக் காதல் இந்தப் படங்களின்போதே பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆதியின் சமீபத்திய பேட்டி
ஆனால் இந்த விஷயத்தை இவர்கள் ஏற்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. தொடர்ந்து இவர்களின் காதல் பேசுபொருளாக இருந்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஆதி, தான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்றும் விரைவில் இதுகுறித்து அறிவிப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நிக்கி -ஆதி நிச்சயதார்த்தம்
ஆனால் தற்போது ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமண தேதி குறித்து அறிவிப்பை இந்த ஜோடி வெளியிடவுள்ளது. தமிழில் நிக்கி கல்ராணி நடிப்பில் அடுத்ததாக இடியட் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
Recommended Video

தொடர்ந்து நடிப்பாரா நிக்கி?
திருமணத்திற்கு பிறகு நிக்கி தொடர்ந்து நடிப்பாரா என்பது குறித்தும் அவரது ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். டார்லிங், கோ2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நிக்கி கல்ராணி என்பது குறிப்பிடத்தக்கது.